---Advertisement---

வருகிறவர்களை எல்லாம் வளர்த்துவிட்டுட்டு இருக்க…விவேக்கிடம் கேட்ட வடிவேலு கொட்டாச்சி பகிர்ந்த தகவல்

Published on: March 16, 2026
vdivelu with vivek
---Advertisement---

வடிவேலு தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களில் தனி இடம் உண்டு. இவரது காமெடி இன்றைய தலைமுறையினர் கூட ரசிக்கிறார்கள். மீம்ஸ்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் வடிவேலு குறித்து திரையுலகில் மாறுபட்ட கருத்து உண்டு. வடிவேலு நல்ல மனிதர் என்று எவரும் கூறுவதில்லை.. தன்னை வளர்த்துவிட்டவர்களையே மறந்தவர் என்றூம் கூறுவர். அதற்கு உதரணமாக விஜயகாந்தை கூறலாம். ஆரம்ப காலங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்புகள் கிடைக்க உதவியவர். பின்னாளில் அவரையே கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு பலனாக சில ஆண்டுகள் திரையுலகிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார் வடிவேலு.

இந்த நிலையில் காமெடி நடிகர் கொட்டச்சி ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பெண்ணின் மனதை தொட்டு படத்தில் நடிகர் விவேக்குடன் இணைந்து கொட்டாச்சி காமெடி செய்திருப்பார். அந்த படத்ட்ய்ஹில் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. கொட்டாச்சி கூறும்போது, வடிவேலு ஒருநாள் விவேக்கிற்கு போன்செய்து என்ன விவேக், என்ன வரவன எல்லாம் வளர்த்துவிட்டு இருக்கனு கேட்டுருக்காரு, அதற்கு விவேக் அவங்கள யாரும் வளர்த்துவிடல, அவங்க திறமை, அவங்களுக்கு சினிமாவினால் சாப்பாடு கிடைக்கனும்னு எழுதியிருந்தா கிடைக்கும். நீயோ நானோ தடுக்க் நினைச்சாலும் தடுக்க முடியாது. அவங்க அவங்களோட திறமையினால வளர்கிறாங்க. பாவம்யா எல்லோரும் குடும்பத்தை விட்டுவிட்டு பசி பட்ட்ணியோடு வந்துருக்காங்க என்று சொன்னாராம்.

இந்த தகவலை கொட்டாச்சி பகிர்ந்ததாக சோசியல் மீடியக்களில் செய்திகள் வலம் வருகின்றன.