பிரபல நடிகர் தீடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்...
X
பல மலையாள படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப். இவர் கோட்டையம் பிரதீப் என அழைக்கப்பட்டு வந்தார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா, சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா, ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி என பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்துள்ளார். நெஞ்சுவலி ஏற்படவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவருக்கு 61 வயது ஆகிறது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவரின் மறைவை அடுத்து தமிழ் மற்றும் மலையாள திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story