காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க இருந்த சூப்பர் ஸ்டாரின் தந்தை… இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!!

Kadhalikka Neramillai
1964 ஆம் ஆண்டு சி.வி.ஸ்ரீதரின் இயக்கத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காதலிக்க நேரமில்லை. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களால் மிகவும் விரும்பி ரசிக்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த காஞ்சனாவின் இயற்பெயர் வசுந்தரா. இவர் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். மேலும் தெலுங்கில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்திருந்தார்.

Kanchana
“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது காஞ்சனாவை முத்துராமனுக்கு ஜோடியாக நடிக்கவைக்கலாம் என்று யோசித்தார் ஸ்ரீதர். அதன் படி காஞ்சனாவின் தந்தையை பார்க்கச் சென்றார். ஆனால் காஞ்சனாவின் தந்தையோ முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் அதன் பின் ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்தார் ஸ்ரீதர்.

CV Sridhar
இத்திரைப்படத்தில் நடித்த ரவிச்சந்திரனுக்கு இதுதான் முதல் திரைப்படம். ஆனால் ஸ்ரீதர் ரவிச்சந்திரனை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அந்த கதாப்பாத்திரத்திற்கு இரண்டு முன்னணி நடிகர்கள் ஆடிஷனுக்கு வந்தார்களாம்.

Sivakumar
அதில் ஒருவர் நடிகர் சிவக்குமார். மற்றொருவர், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணா.
நடிகர் கிருஷ்ணாவின் தமிழ் உச்சரிப்பில் கொஞ்சம் தெலுங்கு வாடை அடித்ததால் ஸ்ரீதருக்கு திருப்தியாக இல்லையாம். அதன் பிறகுதான் ஸ்ரீதர் ரவிச்சந்திரனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் இந்த பிரபல இயக்குனரின் மகளா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

Mahesh Babu and Krishna
சிவக்குமார் ஆடிஷனுக்கு கிளம்பும்போதே ரவிச்சந்திரனை ஸ்ரீதர் தேர்ந்தெடுத்துவிட்ட செய்தி அவருக்கு தெரிய வந்துவிட்டதாம். ஆதலால் அவர் ஆடிஷனுக்கே போகவில்லையாம்.