Producer V.Sekar: சினிமாவை பொருத்தவரைக்கும் அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் சமீபகாலமாக அதிகரித்து விட்டனர். பிஸினஸ் பெருமளவு நடக்க வேண்டும் என்பதற்காக கடனை வாங்கி பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்து ரசிகர்களை கவர்வதற்காக தயாரிப்பாளர்கள் வித விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நடிகர்களின் சம்பளம் இந்தளவு கோடி கோடியாய் உயர்ந்ததற்கும் காரணம் இந்த மாதிரி தயாரிப்பாளர்கள்.
ஆனால் தயாரிப்பாளர் வி.சேகர் இதற்கெல்லாம் கொஞ்சம் வித்தியாசமானவர். என் பணம், என் படம், நான் முதலீடு போட்டு படம் எடுக்கிறேன். அப்படி இருக்கும் போது நஷ்டம் அடைய விடுவேனா? என்று நினைத்தே கொஞ்சம் கறாராகவே இருந்திருக்கிறார். ஒரு படத்தின் மொத்த படப்பிடிப்பு 60 நாள்கள் என்றால் அந்த படத்தில் நடிக்கும் கலைஞர்களை மொத்தமாக லாக் செய்து விடுவாராம்.
இதையும் படிங்க: அஜித் போட்டிருக்கும் முகமூடி! பொங்கி எழுந்து வீடியோவை வெளியிட்டதற்கு இதுதான் காரணமா?
இந்தப் படம் முடியும் வரை வேறெந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று எழுதி வாங்கிவிட்டு ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு வரவழைத்து இரண்டு மாதம் லாக் செய்து விடுவாராம். குளிப்பது, கழிவறை பயன்படுத்துவது எல்லாமே அந்த செட்டிற்குள்தானாம். இப்படித்தான் தன் படத்தில் கலைஞர்களை நடிக்க வைத்திருக்கிறார்.
ஒரு படத்திற்காக குமரிமுத்து நடித்துக் கொண்டிருந்தாராம். பத்து நாள் இடைவெளி குமரிமுத்துவிற்கு கிடைத்திருக்கிறது. அந்த பத்து நாளில் வெளி நாட்டில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. முடித்துவிட்டு வருகிறேன் என்று சேகரிடம் குமரி முத்து அனுமதி கேட்டிருக்கிறார். இரண்டு நாளில் திரும்பி வந்து விட வேண்டும் என சேகர் கூறி அனுப்பி வைத்தாராம்.
இதையும் படிங்க: அஜித் போட்டிருக்கும் முகமூடி! பொங்கி எழுந்து வீடியோவை வெளியிட்டதற்கு இதுதான் காரணமா?
துரதிர்ஷ்டவசமாக வெளி நாட்டிலேயே குமரி முத்துவின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாம். க்ளைமாக்ஸ் காட்சியில் குமரி முத்து நடிக்க வேண்டியிருந்ததாம். பாஸ்போர்ட் எல்லாம் அப்ளை செய்து நேராக செட்டிற்கே வந்திருக்கிறார் குமரி முத்து. ஆனால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். இதனால் தனக்கு 15 லட்சம் நஷ்டம் என தயாரிப்பாளர் வி.சேகர் ஒரு பேட்டியில் கூறினார்.
இவர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என விவேக் விரும்பி சென்றாராம். ஏனெனில் கவுண்டமணி, வடிவேலு போன்றவர்கள் எல்லாம் சேகர் படத்தில் நடித்து அந்தப் படங்கள் 100 நாள்கள் ஓடியதாம். அதே போல் நம் படமும் 100 நாள் ஓட வேண்டும் என சேகர் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் வந்த பிறகுதான் தெரிந்ததாம் இது ஒரு ஜெயில் என்று என விவேக் கூறியதாகவும் சேகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: KPY பாலா செய்யும் உதவியால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை… ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலையே!
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…