வேற சாய்ஸ் இல்லை.. தன் மகளை வைத்தே டைரக்ட் பண்ண போகும் பிரபல நடிகர்!.. ஹீரோ யாருனு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-03-30 14:22:37  )
liv
X

livingston

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் கைகள் ஓங்கிய நிலையில் உள்ளன. அப்பொழுது இருந்தே இப்ப வரைக்கும் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். விஜய், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஷங்கரின் மகளான அதீதியும் இப்போது சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார். இந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டனும் தன் மகளை சினிமாவில் இறக்க ஆயத்தமாகி வருகிறார்.

அதுவும் அவரது டைரக்‌ஷனிலேயே மகளை அறிமுகம் செய்ய உள்ளாராம். ஒரு காலத்தில் லிவிங்ஸ்டன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான படம் தான் ‘சுந்தர புருஷன்’. இந்தப் படம் எந்த அளவு வெற்றியை பதிவு செய்தது என யாராலும் மறக்க முடியாது. படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக ரம்பா நடித்திருப்பார். இப்போது மீண்டும் லிவிங்ஸ்டன் ஒரு புதிய கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி,சௌத்ரியிடம் கூறியிருக்கிறார். சௌத்ரிக்கும் கதை பிடித்துப் போக லிவிங்ஸ்டனையே தயாரிக்கவும் சொல்லியிருக்கிறார்.

மேலும் பைனான்ஸ் சௌத்ரி பண்ணுவதாக கூறியிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் மகளுக்கு ஹீரோவாக சௌத்ரியின் மூத்த மகனான ஜித்தன் ரமேஷை நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் முதலில் சௌத்ரி தயங்கினாராம். அதன் பின் சரி என்று சொல்லிவிட்டாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்படுகிறது.

Next Story