நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்...

Actor livignston: இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பல படங்களிலும் வேலை செய்தவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் இருந்த இவரை விஜயகாந்த் ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் மூலம் நடிகராக மாற்றினார். அந்த திரைப்படத்தில் வில்லனாக லிவிங்ஸ்டன் நடித்திருந்தார்.
அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். கேப்டன் பிரபாகரன் படம் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். திடீரென சுந்தர புருஷன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன்பின் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். சொல்லாமலே படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: நான் ஒன்னு நினைச்சி போனேன்.. விஜயகாந்த் வேற ஒன்னு பண்ணிட்டார்!.. லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்..
ஆனால், தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். ஹீரோ மற்றும் ஹீரோயினியின் அப்பாவாக நடிக்க துவங்கினார். இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திரை வாழ்வில் தான் சந்தித்த பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நடிகர் கமல் தன்னுடன் நட்பாக பழகியதாகவும் தனது நடவடிக்கையால் அதை கெடுத்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
சினிமாவில் நண்பர்களை நான் அடிக்கடி சந்திப்பது இல்லை. பார்க்கும்போது பேசுவதோடு சரி. இப்படி நான் ஒதுங்கி இருந்ததாலேயே வாய்ப்புகள் இழந்துவிட்டேன். குறிப்பாக கமல்சாரின் நட்பும் எனக்கு கிடைத்தது. நான் அவருடன் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு என்னை பிடிக்கும். அவர் வீட்டில் எந்த விழா என்றாலும் என்னை அழைப்பார். தொலைப்பேசியில் அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார்.
என் பொறுப்பற்ற தனத்தால் அவரின் நட்புக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபர் அவர். காரியத்திற்காக யாரிடமும் அவர் பழக மாட்டார். சில நாட்கள் பழகினாலும் உண்மையாக பழகுவார். முட்டாளதனமாக கமல் சாரின் நட்பை தவறவிட்டுவிட்டேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என லிவிஸ்டன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக லிவிங்ஸ்டன் செய்த வேலை… பயந்து போன பிரபல இயக்குனர்!. என்னவா இருக்கும்?