காமிராவுக்கு ஏற்ற மாதிரி என்னால நடிக்க முடியாது...காமிராவ கொண்டுட்டு பின்னாடியே வா...எம்.ஆர்.ராதா காட்டம்..!

by sankaran v |   ( Updated:2022-11-01 02:45:54  )
radha
X

radha

எம்.ஆர்.ராதாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனது உன்னத நடிப்பால் பெரும் வரவேற்புக்குள்ளானவர். தனது வசன உச்சரிப்பில் பல்வேறு தொனிகளைக் கொண்டு வந்து கலக்குபவர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளுக்கே சவாலாக விளங்குபவர் இவர்.

நகைச்சுவை கலந்த இவரது வில்லத்தனமான நடிப்பு இப்போது பார்த்தாலும் நம்மை ரசிக்க வைக்கும். மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் என்று இவர்களுக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் நிறைய உண்டு. அவரது திரையுலகவரலாற்றில் மைல் கல்லாக இருந்த படம் ரத்தக்கண்ணீர். இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சில சுவையான சம்பவங்களைப் பார்ப்போம்.

MR Ratha

ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ரதா தொழுநோயாளியாக நடித்து பார்வையாளர்களின் கண்களைக் குளமாக்கி இருப்பார். படத்தின் ஆரம்பத்தில் படோடோபமாக நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார். காலத்தால் அழியாத காவியமாக மாறியது இந்தப்படம். இப்போது பார்த்தாலும் பொருத்தமாகத் தான் இருக்கும்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது சில சுவையான சம்பவங்கள் அரங்கேறின. அவற்றைப் பார்ப்போம்.

இந்தப்படத்தின் காமிராமேன் ஆர்.ஆர்.சந்திரன். டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு. சினிமாவிற்கு ஏற்றவாறு நடிக்கும் விதத்தை ராதாவிற்கு அடிக்கடி சொல்லிக் கொடுப்பார்கள்.

ரத்தக்கண்ணீர் தான் ராதாவிற்கு முதல் படம் என்று கூட சொல்லலாம். ரத்தக்கண்ணீருக்கு முன்னால் ராதா ஏதோ ஒரு படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் அந்தப்படம் ஓடவில்லை. அதனால் மீண்டும் நாடக உலகிற்கே போனார். 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2வது இன்னிங்ஸில் ரத்தக்கண்ணீர் படத்தில் நடித்தார்.

MR Ratha 2

படப்பிடிப்பின்போது நடந்த ஒரு ஷாட்டில் அண்ணே நீங்க குறிப்பிட்ட மார்க்கை விட்டு தள்ளிப் போய் நடிக்கிறீங்க. அப்படிப் போனா காமிராவில் போகஸ் மாறிடும். படம் வராது. அதனால் மார்க்கைத் தாண்டிப் போகாதீங்க என்றார்.

உடனே ராதா கோபத்துடன் என் நடிப்பைப் படம்பிடிக்கிறது தான் உன் காமிராவோட வேலை. உன் காமிராவுக்கு ஏத்த மாதிரி என்னால நடிக்க முடியாது. நீ வேணும்னா அதுக்குத் தகுந்தா மாதிரி காமிராவோடு என் பின்னாலேயே வா என்றாராம்.

MR Ratha 3

வேறு வழியில்லாமல் காமிராமேனும் அவர் இஷ்டப்படியே படம்பிடித்தாராம்.

கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஆர்.ராதாவின் கார் நின்று கொண்டு இருந்தது. ஒரு தொழுநோய் பிச்சைக்காரன் வந்து ராதாவிடம் பிச்சை கேட்டான். இவர் சில்லறை இல்லை என்றார். உடனே அவன் கையைத் தட்டி ஒரு மாதிரி பரிதாபகரமான பாவனையுடன் மீண்டும் பிச்சை கேட்டான்.

ராதா உடனே, பாருய்யா, நான் நடிச்சதைப் பார்த்துட்டு அதை நம்மகிட்டயே காட்டுறான் என்றார்.

Next Story