More
Categories: Cinema History Cinema News latest news

அந்த விஷயத்துல கமலை விட ரஜினிதான் அறிவாளி.. மதன்பாப் சொன்ன சீக்ரெட்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக இருந்த ஒரு சில நகைச்சுவை நடிகர்களில் நடிகர் மதன் பாப் முக்கியமானவர். தனது தனிப்பட்ட நகைச்சுவை திறனால் மக்களை ஈர்த்தவர். இவர் சில படங்களில் வெகு சில காட்சிகளிலேயே வருவார். ஆனால் அந்த காட்சிகள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுவிடும்.

ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவிற்கு இசையமைப்பாளராக வேண்டும் என்றுதான் மதன் பாப் சினிமாவிற்கு வந்தார். ஆனால் இறுதியில் ஒரு நடிகராகிவிட்டார். 1987 இல் முதன் முதலில் காவலன் அவன் கோவலன் என்கிற திரைப்படத்தில் மதன் பாப் அறிமுகமானார்.

Advertising
Advertising

அதன் பிறகு தேவர் மகன், நம்மவர், போன்ற பல படங்களில் நடித்தார். ஃப்ரெண்ட்ஸ் போன்ற அவரது சில படங்களின் காமெடி மிகவும் பிரபலமானவை. இதுவரை 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் நடிகர் மதன் பாப்.

மதன் பாபு சொன்ன விஷயம்:

தற்சமயம் ஒரு பேட்டியில் மதன் பாப் பேசும்போது ரஜினி மற்றும் கமல் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே பொது பேட்டிகளில் நிறைய பேசுவதை பார்த்திருப்போம்.

உண்மையில் ரஜினிகாந்த் இந்த மாதிரியான நிகழ்வுகள், பேட்டிகளில் பேசுவதற்கு முதல் நாளே தயாராகிவிடுவாராம். என்னவெல்லாம் பேச வேண்டும் என்பதை தீர்மானித்து மனதில் அவற்றை ஏத்திக்கொண்டு பேசுவதால் அவர் பேசுவது மிகவும் நிதானமாக இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் கமல்ஹாசன் அப்படியில்லை. அந்த இடத்திலேயே என்ன பேச வேண்டும் என முடிவெடுத்து பேசுவார். இதனால் அடிக்கடி கமல்ஹாசன் பேசுவதே என்னவென்று நமக்கு புரியாது. எனவே அந்த விசயத்தில் ரஜினி கொஞ்சம் புத்திசாலி என தன் பேட்டியில் கூறியுள்ளார் மதன் பாப்.

இதையும் படிங்க: கல்கியின் ‘பொன்னியின் செல்வனாக’ நிஜத்திலேயே வாழ்ந்தவர் சிவாஜி!.. என்ன விஷயம் தெரியுமா?..

Published by
Rajkumar

Recent Posts