கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா, துசாரா விஜயன், சஞ்சனா, பசுபதி, ஜான் விஜய் ஆகிய பலரின் நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. 1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த பாக்ஸிங் பரம்பரைகளை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார்.
ஆர்யா
ஆர்யாவின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய வெற்றி திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் கதையை பா.ரஞ்சித் முதலில் கார்த்தியிடம்தான் கூறினாராம். ஆனால் கார்த்தி அந்த கதையை நிராகரிக்க, அதன் பிறகுதான் “மெட்ராஸ்” திரைப்படம் உருவானது.
மதன் பாபு
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் மதன் பாபு. இவரது தனித்துவமான சிரிப்பை பலரும் அறிந்திருப்பார்கள்.
இந்த நிலையில் மதன் பாபு குறித்து யாரும் அறியாத பல அரிய தகவல்களை சமீபத்திய வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
இசை ஆர்வலர்
மதன் பாபுவின் இயற்பெயர் கிருஷ்ண மூர்த்தி. இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு இசைக் கச்சேரிகளில் வயலின், கித்தார் போன்ற ஒலிக்கருவிகளை வாசித்துக்கொண்டிருந்தாராம். இவருடன் பணியாற்றிய சக பாடகி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம் மதன் பாபு.
இதையும் படிங்க: தெலுங்கு இயக்குனர்களாக தேடி பிடித்து நடிக்கும் தனுஷ்… எல்லாத்துக்கும் காரணம் அந்த டான்சர் நடிகைதானாம்!!
குத்துச் சண்டை வீரர்
அதே போல் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உடையவராம் மதன் பாபு. குறிப்பாக சார்பட்டா பரம்பரை அணியில் குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தாராம். அதே போல் பளு தூக்குதல், பாடி பில்டிங்க் போன்றவற்றில் ஈடுபாடு உடையவராக திகழ்ந்தாராம். ஆதலால்தான் இப்போதும் கூட இளமையாக தோற்றம் அளிக்கிறாராம்.
மதன் பாபு சார்பட்டா பரம்பரையில் இருந்தவர் என்பது பா.ரஞ்சித்திற்கு முதலில் தெரியாதாம். அதன் பின் ஒரு நாள் தெரிய வந்தபோது மதன் பாபுவிடம் “சார்பட்டா பரம்பரையில் நீங்கள் இருந்தீர்கள் என்ற விஷயம் எனக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் அந்த படத்தில் நான் உங்களை பயன்படுத்தி இருப்பேன்” என பா.ரஞ்சித் கூறினாராம். மக்களின் பார்வைக்கு மிகவும் சாதாரண நடிகராக திகழும் மதன் பாபு, இத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது.
நடிகர் பிரதீப்…
Good bad…
நடிகர் கார்த்திக்கை…
Samantha: தென்னிந்திய சினிமாவில்…
ராணுவத்தை மையமாக…