நீ நடிகையை மட்டும்தான் பாப்பியா!.. நான் என்ன சொம்பயா?!. இயக்குனரிடம் மல்லுக்கட்டிய மாதவன்!..
Actor madhavan: அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். முதல் படத்திலேயே சாக்லெட் பாயாக பெண்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக அவரின் சிரிப்பில் இளம் பெண்கள் பலரும் அவருக்கு ரசிகைகளாக மாறினார்கள். மாதவன் ஜாகர்கண்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் இவர்.
மும்பையில் ஒரு தொலைக்காட்சியில் வேலை செய்தார். ஹிந்தி நன்றாக தெரியும் என்பதால் சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்தார். அதன்பின்னர்தான் மணிரத்தினத்தின் கண்ணில் பட்டு அலைபாயுதே படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: மாதவன் என்னை பழிவாங்கிட்டான்… இயக்குனரிடம் அவமானப்பட்ட கெளதம் மேனன்!..
டும் டும் டும், குரு, மின்னலே, அன்பே சிவம், ரன், ஆயுத எழுத்து, விக்ரம் வேதா, மாறா, இறுதிச்சுற்று ஆகியவை மாதவன் நடிப்பில் உருவான முக்கிய படங்களாகும். நடிகர், கதாசிரியர், இயக்குனர் என கலக்கி வருகிறார். ராக்கெட்ரி என்கிற படத்தில் நம்பியார் மாதவன் என்கிற விஞ்ஞானியின் வாழ்க்கையை கதையை இயக்கி, நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.
இப்படத்திற்காக அவருக்கு சில விருதுகளும் கிடைத்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திறமையாக பேசி நடிக்கும் நடிகர் இவர். லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம் ரன். சாக்லேட் பாய் மாதவனை வைத்து ஆக்ஷன் படத்தையும் எடுக்க முடியும் என லிங்குசாமி நிரூபித்த படம் இது.
இதையும் படிங்க: சம்பள விஷயத்தில் ஹீரோக்களை குற்றம் சாட்டுவது சரியா?.. அப்பவே சவுக்கடி கொடுத்த மாதவன்..
இந்த படத்தில்தான் மீரா ஜாஸ்மின் அறிமுகமாகி அப்போதைய இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். மீராஜாஸ்மின் போல அழகாக, துருதுருவென, குழந்தை போல் பேசும் முகம் கொண்ட பெண் தனக்கு மனைவியாக கிடைக்காதா என பலரும் ஏங்கிய நேரம் அது. அவரின் நடிப்பில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லிங்குசாமி ‘இந்த படம் மீரா ஜாஸ்மினுக்கு முதல் படம் என்பதால் நான் படப்பிடிப்பில் அவர் நடிப்பதையே பார்த்துக்கொண்டிருப்பேன். இதை கவனித்த மாதவன் ‘நீங்கள் என்னை பார்ப்பதே இல்லை. மீராவையே பாத்துக்கிட்டு இருக்கீங்க’ என சண்டை போடுவார். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் உங்களை பார்க்கவே தேவையில்லை என எதையாவது சொல்லி சமாளிப்பேன்’ என லிங்குசாமி பேசினார்.
இதையும் படிங்க: பாடல்களே இல்லாமல் படமெடுக்க முடிவு செய்த மணிரத்னம்… அதிர்ச்சியில் உறைந்துப் போன மாதவன்…