என்ன ஒரு அசாதாரண முயற்சி!... மேடி ட்விட்!... இந்த படத்தை காப்பாத்திடலாம்னு இன்னுமா நம்புறீங்க?!...

by ramya suresh |
madhavan
X

madhavan

கங்குவா திரைப்படம் குறித்து நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருள் செலவில் இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சிவா. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: Dhanush: பதில் சொல்ல நேரமில்ல.. நயன்தாரா அறிக்கைக்கு பிறகு தனுஷின் தந்தை கொடுத்த பதில்

சூர்யாவின் கெரியரில் இந்த திரைப்படம் மிகவும் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியானது முதலே நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்களை கொடுத்து வருவதால் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கின்றது.

தற்போது வரை இப்படம் 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் படம் வெளியிட்டுக்கு முன்பு தயாரிப்பாளர் 2000 கோடி வசூல் செய்யும் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால் தற்போது 200 கோடியை தொட்டாலே அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகின்றது.

kanguva

kanguva

இந்த திரைப்படத்தில் அதீத சத்தம், 3டி காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் படத்தின் கதை போன்றவை விமர்சனத்திற்கு உள்ளானது. சூர்யாவையும் பலரும் விமர்சித்து வந்தார்கள். இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். நடிகை ஜோதிகா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் கங்குவா படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவினரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் . அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நேற்று இரவு கங்குவா திரைப்படத்தை திரையில் பார்த்தேன். உங்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியப்படைகின்றேன். என் அன்பு சகோதரா.. நீங்கள் செய்ததில் பாதியாவது நான் செய்ய விரும்புகிறேன்' அற்புதமான முயற்சி என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: வரிசையாக பிளான் போட்டு இருக்காரே… சத்தமில்லாமல் தனுஷின் அதிரடி…

நடிகர் மாதவன் வெளியிட்டு இருக்கும் இந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இன்னுமா இந்த திரைப்படம் மீண்டு வந்துவிடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறீர்கள். திரையுலகை சேர்ந்த பலரும் இந்த திரைப்படத்தை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் படக்குழுவினரும் படத்திலிருந்து சில காட்சிகளை வெட்டி எடுத்து இருக்கிறார்கள்.

மேலும் படத்தின் சத்தத்தையும் குறைத்து இருக்கிறார்கள். இருப்பினும் படம் வெளியான முதல் நாளில் இருந்தே கடும் விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் இந்த திரைப்படம் மீண்டும் வெற்றி படமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.

Next Story