டேக் ஆஃப் ஆகும் ‘சிம்பு 48’ திரைப்படம்! அதற்கு காரணமான நடிகர் யார் தெரியுமா?

by Rohini |
simbu
X

#image_titlsimbue

Simbu: மாநாடு திரைப்படத்தின் வெற்றி சிம்புவை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து திரும்பவும் வந்துட்டேன்னு சொல்லு என்ற பாணியில் வந்து நின்றார் சிம்பு.

இனிமேல் சிம்புவின் ஆட்டம் தான் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படம் ஒரு வரலாற்று பின்னணியை அடிப்படையாகக் கொண்ட கதையாகவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகவும் பேசப்பட்டது.

இதையும் படிங்க:என்னை யாருமே நம்பலை… மங்காத்தாக்கு முன்னரே அஜித் செய்த பெரிய உதவி.. சர்ப்ரைஸ் சொன்ன வெங்கட் பிரபு

அதனாலயே அந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் படத்தைப் பற்றிய வேறு எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்தன. ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கப் போவதில்லை என்றும் அந்த படம் டிராப்பாக போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதற்கு ஈடாக கமலுடன் இணைந்து மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு தக் லைப் படத்தில் நடித்து வருகிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி இப்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. தேசிங்கு பெரிய சாமியுடன் சிம்பு அந்தப் படத்தை தொடர போகிறாரா இல்லையா என்ற ஒரு கேள்வி அனைவரும் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் ராஜ்கமல் அந்த நிறுவனத்தில் இருந்து விலகியதும் தானே அந்த படத்தை தயாரிக்கப் போவதாக சிம்பு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

ஆனால் இப்போது வந்த தகவலின் படி அந்த படத்தை துபாயில் உள்ள ஒரு பெரிய தயாரிப்பாளர் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணமாக இருக்கும் நடிகர் சிம்புவின் நண்பரும் நடிகருமான மகத் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க:பிரம்மாண்ட வரலாற்று கதையை விஜய்க்கு சொன்னேன்.. இதனால் நடக்கலை… ஃபீல் பண்ணும் சசிகுமார்

சிம்புவை சுற்றி எப்பொழுதுமே நண்பர் வட்டாரங்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது மகத்தை மட்டுமே தன்னுடன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது .அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கால்ஷீட் அனைத்தையும் மகத்தான் இப்போது பார்த்து வருகிறாராம் .

mahat

mahat

சிம்பு 48வது படத்திற்காக அடிக்கடி மகத் துபாய் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்கு காரணம் இந்த படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர் துபாயில் தான் இருக்கிறாராம். 120 கோடி பட்ஜெட்டில் உருவாக போகும் இந்த படம் ஒரு வேளை டேக் ஆப் ஆனால் அதற்கு முழு காரணம் மகத்தாகத்தான் இருப்பார் என்றும் கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: காரா கப்பலா? அடுத்த புதிய காரை வாங்கிய அஜித்.. என்னம்மா போஸ் கொடுக்காரு பாருங்க

Next Story