வயசான வேடத்தில் நடிச்சது என் தப்பா?.. ஒரு போன் காலால் நொந்து கொண்ட மேஜர் சுந்தராஜன்!..

by Rohini |
major
X

major sundarajan

தமிழ் சினிமாவில் அப்பா கதாபாத்திரத்திற்கு என்றே தீர்மானிக்கப்பட்டவர் போல வந்தவர் தான் மேஜர் சுந்தராஜன். முன்னனி நடிகைகளான கே.ஆர்.விஜயா, சௌகார் ஜானகி என அனைத்து முன்னனி நடிகைகளுக்கு அப்பாவாகவே நடித்தவர் மேஜர். இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பே இவருக்கு திருமணமாகி இருந்தது.

மேலும் அப்பாவாக நடிக்கிறார் என்றால் அந்த அளவுக்கு அவருக்கு வயதாகவும் இல்லை. சின்ன வயதில் அப்பாவாக நடித்திருந்ததனால் அவரது மனைவியின் உறவினர்கள் என்ன வயதான ஆளை திருமணம் செய்திருக்கிறாய் என்று கேட்க ஆரம்பித்தார்களாம். அதனால் மேஜர் சூட்டிங் முடிந்து ஊருக்கு போகும் போதெல்லாம் அவரது மனைவி அவரது எல்லா உறவினர்கள் வீட்டிற்கும் அழைத்துக் கொண்டு போவாராம்.

major1

major sundarajan

போனால் ஒரு வீட்டில் 20 பேர் அமர்ந்திருப்பார்களாம். முதலில் ஏன் இப்படி செய்கிறாள் என்று புரியாமல் இருந்த மேஜருக்கு அதன் பிறகு தான் விஷயம் தெரிந்திருக்கிறது. சூட்டிங்கில் தான் அப்படி இருப்பார்,உண்மையிலேயே இவர் வயதானவர் இல்லை என்று காட்டுவதற்காகவே அழைத்துக் கொண்டு போகிறாள் என்று புரிந்துக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : சிவாஜியால் முடிவுக்கு வந்த மேஜர் சுந்தராஜின் நட்பு!.. இறக்கும் தருவாயிலும் பேசாமல் இருந்த நண்பர்கள்..

மேலும் இவர் ஒரு படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருக்கிறார். அங்கு ஒர் ஹோட்டலில் தங்கினாராம். திடீரென ஹோட்டல் நம்பருக்கு போன் வந்திருக்கிறது. அதுவும் மேஜருக்கு வந்திருக்கிறது. அதனால் அந்த ஹோட்டல் ஊழியர் இவரிடம் சொல்ல ஆணா பெண்ணா என்று கேட்டாராம். ஒரு பெண் தான் பேசுகிறார். உங்கள் ரசிகையாம் என்று கூறியதும் மேஜருக்கு ஒரே சந்தோஷமாம், சரி இணைத்து விடு என்று சொல்லியிருக்கிறார்.

major2

major2

எதிர்முனையில் பேசிய பெண் மேஜர் குரலை கேட்டதும் சார் கொஞ்சம் இருங்கள் , என் பாட்டி உங்களிடம் பேசவேண்டுமாம், அவர் உங்கள் தீவிர ரசிகை என்று சொன்னதும் மேஜருக்கு குபீர் என்று ஆகிவிட்டது. உடனே இணைப்பை துண்டித்து விட்டாராம். வயதான வேடத்தில் நடித்ததால் என்னென்னலாம் கஷ்டங்களை படவேண்டியிருக்கும் என நொந்து கொண்டாராம் மேஜர். இந்த அழகான பதிவை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Next Story