அதுல மாஸ்டர்னு பேர் வாங்குன நடிகர்!..ஏன் எல்லாம் தெரிஞ்ச கமலால் கூட அது முடியலயே!..

by Rohini |
kamal_main_cine
X

தமிழ் சினிமாவில் பல மொழிகள் பேசக்கூடியவர் என்று பேர் வாங்கியவர் நடிகரும் உலக நாயகனுமான கமலஹாசன். ஈடுஇணையற்ற தன் நடிப்புத் திறமையால் உலகநாயகன் என்ற பேரை வாங்கினார் கமல்.

kamal1_cine

களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பத்த இவரது திரைப்பயணம் இன்று வரை விக்ரமாக ஜொலித்து வருகிறார். கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து திகழ்கிறார்.

இதையும் படிங்க : அப்பாவிடம் நடிகர் அப்புக்குட்டி போட்ட சபதம்… என்ன நடந்துச்சு?

kamal2_cine

தமிழ் சினிமாவில் நடிகர்களிலேயே அதிக மொழிகள் தெரிந்த நடிகர் இவராகத்தான் இருப்பார். 8வது வரை படித்திருந்தாலும் இலக்கியத்தின் மீதான ஆர்வம் இவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மம்மூட்டி 5 மொழிகளில் நடித்தாலும் எல்லா மொழி திரைப்படங்களுக்கும் அவரே தான் டப்பிங் பேசுவாராம்.

kamal3_cine

ஏன் கமல் கூட ஒரு சில படங்களில் அவருக்காக டப்பிங் பேச மாட்டாராம். ஆனால் நடிகர் மம்மூட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீஸாகும் அவரது படத்திற்கு இன்று வரை அவர் தான் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறாராம். மேலும் தமிழில் ரிலீஸான ஆனந்தம் படத்திற்காக அவர் பேசிய டப்பிங்கை பார்த்து மற்ற நடிகர்கள் எப்படி பேசவேண்டும் என்று இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்ற விமர்சனம் எல்லாம் அப்போது வந்திருக்கிறதாம். இதனாலேயே இவரை டப்பிங் மாஸ்டர் என்று கூறுவார்களாம்.

Next Story