Cinema History
தமிழ் பட டைரக்டரை ‘கிராக்’னு சொன்ன மம்முட்டி… அப்புறம் எப்படி படம் பிக்கப் ஆச்சு?
கேப்டன் பிரபாகரன் என்று விஜயகாந்தை வைத்து மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. அவர் மம்முட்டி நடிக்க மக்களாட்சி படம் இயக்கினார். அப்போது கேரள அவருடனான தனது அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
மக்களாட்சி படத்துக்கு முதல்ல ரஜினி சார் கிட்ட கதை சொன்னேன். அவர் கொஞ்சம் திருத்தம் சொன்னாரு. அப்புறம் அரசியலா இருக்குன்னு ஒத்துக்கல. அப்புறம் ரெண்டு மூணு ஹீரோ கிட்ட கதை சொன்னேன். அவங்களும் கொஞ்சம் மாற்ற் சொன்னாங்க. ஆனா நான் ஒத்துக்கல. இந்தக் கதையை யார் ஒத்துக்கறாங்களோ அவங்க தான் ஹீரோன்னு சொன்னேன்.
கதையை மாத்த மாட்டேன்னுட்டேன். மம்முட்டிக்கிட்ட கதை சொல்ல நான் போகல. ராம்தாஸ் தான் போனாரு. கதை ஓகே ஆயிடுச்சு. நான் முதன் முதலா மம்முட்டியை சூட்டிங்ல தான் பார்க்கிறேன்.
ரெண்டு நாள் சூட்டிங் பண்ணியே ஆகணும். அப்போ தான் பைனான்ஸ் அரேஞ்ச் பண்ண முடியும். ரெண்டு நாள் சூட்டிங்ல அவரு எனக்கு செட்டாகல. புது ஆளுக கூட அவரால உடனே மிங்கிள் ஆக முடியல. உடனே அசிஸ்டண்ட் கிட்ட சொல்லிட்டாரு.
‘டேய் இந்த ‘கிராக்’கோடலாம் நான் படம் பண்ண மாட்டேன்’னு. உடனே அவருக்கும் எனக்கும் செட்டே ஆகாது. அவரு ஈகோயிஸ்டா இருக்காரு. இவருக்கும் எனக்கும் செட்டே ஆகாது. படமே வேண்டாம்னு சொன்னேன். ஒரு ஆறு மாசமா படம் டிராப்பாயிடுச்சு.
படம் பண்ற ஐடியாவே இல்லை. அப்புறம் அம்மா கிரியேஷன் சிவா சார் வந்து பேசி படம் பண்ண வச்சாரு. மம்முட்டியிடமும் பேசி சமாதானப்படுத்தினாங்க. அப்புறம் அவரு கூட தான் படம் பண்ணியே ஆகணும். என்ன மிஸ்டேக்? என்னை சரிபண்ணிக்கனும்னு நினைச்சேன்.
அப்புறம் ரெண்டு நாள் அவருக்கிட்ட பேசும்போது தான் தெரிந்தது. அவர் மிக அற்புதமான மனிதர். நடிகர் அல்ல. அன்பானவர். ஒழுக்கமானவர். சுயநலமற்றவர். கொஞ்சம் ஈகோ. நான் சிறந்த நடிகன் என்கிற ஈகோ. அதை யாரும் தமிழ் இயக்குனர்கள் அங்கீகரிக்கவில்லை என்ற கோபம் அவரிடம் இருக்கு.
நான் ரெண்டு கமர்ஷியல் படம் பண்ணினேன். அது பெரிய அளவில் அவருக்கு அப்பீல் ஆகல. பாலசந்தர் கூட மட்டும் தான் அவர் படம் பண்ணிருக்காரு. அப்புறம் அவர் வீட்டுக்கு எல்லாம் போய் நல்ல பழகியதும் தான் அவரோட கேரக்டர் புரிஞ்சிடுச்சி.
அப்புறம் ‘அரசியல் ‘ படத்துல கொஞ்சம் வீழ்ச்சி. படத்தைப் பற்றி அவரிடம் சொன்னேன். பண்ணலாம்னாரு. சார் கதை சொல்றேன்னு சொன்னேன். கதை அதை சொல்லி அதையா நீ எடுக்கப் போறேன்னு கேட்டாரு… அப்புறம் அந்தப் படத்துக்கு பைனான்ஸ், ஏரியா உள்பட தேவையான எல்லா உதவிகளையும் ஏற்பாடு செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.