தளபதி படத்துல ஆட ரொம்ப கஷ்டப்பட்டேன்....ஒரே ஸ்பீடுல ஆட முடியாது....நடிகர் மம்முட்டி
நடிகர் மம்முட்டி எந்தவித பந்தாவும் இல்லாமல் சினிமாவில் மிடுக்கான தோற்றத்தில் நடித்து அசத்துபவர். இவர் தமிழ் பேசும் அழகு அழகோ அழகு தான்...! அவ்வளவு தெளிவான உச்சரிப்புடன் பேசுபவர் இவர். இவர் பேசும் தமிழை அழகாக ரசிக்கலாம். 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தமிழில் பேரன்பு படத்தில் நடித்தார். அந்த சமயத்தில் இவர் கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இருக்குற கேப்...ரெண்டு ஜென்டர்...அந்த விஷயம் தான் எனக்கு பிடிச்சது. ஏன்னா அவன் ஒரு கட்டத்தில் முழுவதுமாக அம்மாவா இருக்கணும். அதே நேரம் அப்பாவாகவும் இருக்கணும். மனிதனால ரொம்ப கஷ்டம். பொண்ணா இருக்கும்போது அம்மாவா இருக்கலாம். ஆம்பளையா இருக்கும்போது அப்பாவாத் தான் இருக்க முடியும்.
அப்பாவுக்கு அம்மாவாகவும் கூட இருக்கணும்கறது தான் பேரன்பு படத்தோட விசேஷம். என்னைப்பொறுத்த வரை எனக்கு இப்படிப்பட்ட ஒரு பொண்ணு இருந்தா என்ன பண்ணியிருப்பேனோ அது தான் படத்துல பண்ணியிருப்பேன். அப்படி நினைச்சேன் நான். இது என் பொண்ணு. என் பொண்ணுக்கு இப்படி ஒரு நோய் இருக்கு. என்னுடைய நிலைமை இது. எனக்கு வசதியில்ல. தனியா அந்தப் பொண்ணப் பார்க்கணும். வயசுக்கு வந்துக்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சிக்கிட்டு இருப்பேன்.
ஜெனரேஷனுக்குள்ள எமோஷன் ரீச் ஆகறது அப்படியே தான் போயிக்கிட்டு இருக்கு. மற்றபடி ரசனைல மாறுபடலாம். இந்த ஜெனரேஷனுக்குப் பிடிச்சது அந்த ஜெனரேஷனுக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆரம்பத்துல இருந்த எக்சைட்மெண்ட் இருக்கும். அந்த சர்ப்ரைஸ் இருக்கும். அந்த பேஷன் இருக்கும். அப்ப ஒரு படம் பண்றேன். இப்போ ஒரு படம் பண்றேன். அது இருக்கத்தானே செய்யும்.
அந்தக்காலத்துல 6 நாள் 8 நாள் 15 நாள்ல படம் ஷ_ட் முடிஞ்சிடும். இப்போ தான் 6 மாதமாகுது. டேன்ஸ் ஆடும்போது பார்க்கறதுக்கு நல்லா இருக்கும். இங்க வர்றது அங்க நிக்கம்போது வரல. தளபதி படத்துக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரே ஸ்பீடுல ஆட முடியாது. அது டபுள் பிரேம் வச்சு டபுள் ஸ்பீடுல வச்சா எப்படி இருக்கும். அந்தக் கூச்சம் தான். எனக்கு வரல. இப்போ யாருமே தெருவுல ஆடுறது இல்ல. பொண்ணுங்க பின்னாடி ஆடுறது இல்ல.
அந்த தயக்கம் தான். அது இருக்குறதால படத்துல தெரியுது. நடிகனா இருக்கும்போது தான் இந்த பிட்டு கிட்டுல்லாம் இருக்கு. லாயரா இருந்தா நான் லை (பொய்) கூட பண்ணியிருக்க மாட்டேன். ஆசை இல்லேன்னு சொன்னா பொய் தான். நான் மட்டும்தானா முடியை டை பண்றேன். நான் மட்டும் தானா உடம்பப் பார்த்துக்கறேன். அது ஆசையால தான். அது எல்லோருக்கும் இருக்கு. அழகன்கறது அவங்க வச்சது. அதை நான் பட்டமா எடுக்கல.