‘குட்நைட்’ சொன்னவர்க்கு குட்பையா? தமிழ் சினிமாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சினிமாவில் எளிய மனிதர்களுக்கான வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. எத்தனையோ திறமைகள் இருந்தாலும் சினிமா எதிர்பார்க்கிறதோ வேறு. திறமைகளை நம்பி மட்டும் சினிமாவில் வருவது என்பது கஷ்டம்.அதுவும் இப்ப உள்ள நிலையில் பிஸினஸை மையப்படுத்தி தான் சினிமாவே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே பல சிறு படங்களின் நிலையே தலைகீழாக போய்க் கொண்டிருக்கிறது.
சின்ன சின்ன நடிகர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரிய பெரிய டாப் நடிகர் அவர்களுக்குண்டான மார்கெட்டை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சினிமாவை நம்பி வரும் பல இளம் தலைமுறை நடிகர்களின் நிலை? அப்படி வந்தவர்தான் நடிகர் மணிகண்டன்.
மிமிக்ரியில் அசத்தியவர்
விஜய் டிவியில் இருந்து சாதாரண ஒரு மிமிக்ர் ஆர்டிஸ்ட்டாகத்தான் வந்திருக்கிறார். அவரின் நடிப்பை ஜெய்பீம் படத்திலேயே அனைவரும் பார்த்து மிரண்டு போய்விட்டனர். நடிப்பிற்கு ஒரு உதாரணமாகவே மணிகண்டனை அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். எதார்த்தமாகவும் ஆடம்பரமும் இல்லாமல் நடிக்கக் கூடிய ஒரு அற்புதமான நடிகர்தான் மணிகண்டன். இவரை கண்டிப்பாக தமிழ் சினிமா மிஸ் பண்ணவே கூடாது.
அதுவும் போக சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் மணிகண்டன். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்களின் குரலை அச்சு பிறழாமல் அப்படியே பேசிக் காட்டினார். அது அங்கு இருந்தவர்களை வாயடைக்க வைத்தது. இந்த நிலையில் மணிகண்டனின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் ‘குட் நைட்’. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.
சின்ன பட்ஜெட் படம்
ஆனால் படம் வெளியாகி இன்று வரை ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு படத்தில் மணிகண்டனின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. அதனால் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் கோடிகளில் சம்பளம் கேட்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிப்பட்டது. அதனால் சில பேர் இப்போதுதான் ஒரு படம் வெற்றியடைந்திருக்கிறது. அதற்குள் கோடிகளில் கேட்கிறாரே? என்று புலம்பினார்களாம்.
இந்த ஒரு செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு தங்களின் கமெண்ட்கள் மூலம் ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். அதாவது வெறும் ஃபைட், டான்ஸ்னு 100 கோடிகள் வாங்கும் நடிகர்கள் மத்தியில் மணிகண்டன் ஒரு திறமையான நடிகர், அவருக்கு கொடுப்பதில் என்ன தவறு? என்று கேட்கின்றனர்.
மேலும் மணிகண்டன் நல்லா நடிக்கிறார், அதனால் கேட்கிறார். சில பேர் பாட்டுக்கு பல கோடி, காப்பியடிச்ச கதைக்கு நூறு கோடினு வாங்குகிறார்கள். இவர் நடிக்கும் படங்களில் கதையும் இருக்கு, நடிப்பும் இருக்கு. அதனால் தாராளமாக கொடுக்கலாம் என கூறுகின்றனர். மேலும் சில பேர் இவருக்கு 50 கோடி சம்பளம் கொடுத்தாலும் அது கம்மிதான்.மக்கள் இவரை ஏத்துக்கிட்டாங்க என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : விட்டா எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பேன்! கமலை பற்றிய சீக்ரெட் தெரிஞ்ச ஒரே நபர்