Cinema News
தொடர் வெற்றியை கொடுத்தும் பொழைக்க தெரியாத ஆளா இருக்காரே மணிகண்டன்..
குட் நைட் படம் மட்டும் வரவில்லை என்றால் மணிகண்டன் என்ற ஒரு நடிகர் இருக்கிறாரா என்றே நமக்கு தெரியாமல் போயிருக்கும். அதற்கு முன்பு ஜெய்பீம் படத்தில் நடித்திருந்தாலும் அது வெறும் சூர்யா படம் என்றுதான் அனைவரும் பார்க்க ஆரம்பித்தோம். அப்போது ராசாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் யாரோ ஒருவர் நடித்திருக்கிறார் என்று அசால்ட்டாகத்தான் அதை கடந்து வந்திருப்போம்.
ஆனால் குட் நைட் படம் வந்த பிறகுதான் இவர்தான் ஜெய்பீம் படத்தில் நடித்த ராசாக்கண்ணுவா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சின்ன பட்ஜெட்டில் எடுத்த படமாக குட் நைட் படம் அமைந்தாலும் ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது. சொல்லப்போனால் மணிகண்டன் ஹீரோவாக நடித்த முதல் படமாக குட் நைட் படம் அமைந்தது.
இதையும் படிங்க: காமெடி, ஹீரோலாம் வேலைக்கு ஆவல.. புது அவதாரம் எடுக்கும் சந்தானம்!
குட் நைட் படத்திற்கு முன்பாக காதலும் கடந்து போகும், காலா , விக்ரம் வேதா, போன்ற பல படங்களில் துணை நடிகராக நடித்திருப்பார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் இருந்து வருகிறார். நரை எழுதும் சுயசரிதம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பல்வேறு திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பல விருதுகளையும் இந்தப் படம் அள்ளியது.
குட் நைட் படத்தை போல லவ்வர் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து அந்தப் படமும் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து இரு படங்களின் வெற்றி மணிகண்டனை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. பொதுவாக ஒரு நடிகர் அல்லது நடிகை முதல் படம் வெற்றியடைந்து விட்டால் அவர்கள் கெத்தை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மணிகண்டனை பொறுத்தவரைக்கும் தன்னுடன் ஒரே ஒரு டச்சப் மேனை மட்டும்தான் அழைத்து வருகிறாராம்.
இதையும் படிங்க: Allu Arjun: ‘அந்த’ வார்த்தையை பயன்படுத்தக் கூடாது… புஷ்பா 2 – படத்திற்கு வந்த சிக்கல்!…
மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் டிரெஸ்ஸர் என கம்பெனி யாரை நியமிக்கிறார்களோ அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று தயாரிப்பாளர் சாய்ஸில் விட்டுவிடுகிறாராம். இதை அறிந்த சில பேர் நயன் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் தன்னுடன் வரும் உதவியாளர்களுக்கு தினம் இவ்ளோ சம்பளம் என ஆயிரக்கணக்கில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பிடுங்கி விடுகின்றனர். அந்த வகையில் மணிகண்டனை மனதார பாராட்டலாம்.