ரஜினி ஒரு சுண்டைக்காய்!. எனக்கு அப்பவே தெரியும்... இப்படி சொல்லிட்டாரே மன்சூர் அலிகான்!....

rajini mansoor ali khan
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 454 ஆண்டுகளை கடந்தும் ஒரு உச்ச நட்சத்திரமாக இன்றளவும் கோலோச்சி வருகிறார். 1975 ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தினார்.

mansoor ali khan
அதன் பின் வில்லன் நடிகர், துணை நடிகர், இரண்டாம் நாயகன், நடிகர், பெரிய நடிகர் , உச்ச நட்சத்திரம் என இன்று உலகமே போற்றும் வகையில் வளர்ச்சியடைந்து நிற்கிறார் ரஜினிகாந்த். இன்றளவும் இளம் தலைமுறையினருக்கு போட்டியாக வணிக ரீதியிலும் சரி விமர்சன ரீதியிலும் சரி முன்னிலையில் இருக்கிறார்.
4 தசாப்தங்களாக சினிமாவை ஆண்டு வரும் ரஜினிகாந்தை பற்றி பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மனம் திறந்து அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டு வருகிறது. இயல்பாகவே மன்சூர் அலிகான் தமிழ் நாட்டிற்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் குரல் கொடுப்பவர்.
இதையும் படிங்க : படப்பிடிப்புக்குள் நுழைந்த எம்.ஜி.ஆருக்கு மரியாதை தராத வில்லன் நடிகர்… அவர் சொன்ன பதில்தான் ஹைலைட்!..
யாரையும் பார்க்க மாட்டார். சரமாரியாக விமர்சித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை நிரூபர் ரஜினியின் புகைப்படத்தை காட்டி அவரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘ ரஜினி ஒரு நல்ல நடிகர் அவ்ளோதான், ஆனால் ஏழைகளின் பக்கம் நிற்க மாட்டார், பெரும்பாலும் அனைவருமே தன் குடும்ப நலனையே தானே முதலில் பார்ப்பார்கள், அதே மாதிரி தான் ரஜினியும், கர்நாடகாவில் பல சொத்துக்களை சேர்த்திருக்கிறார், ஆனால் தமிழகத்தில் அவர் நினைத்தால் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம்’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

rajini mansoor alikhan
மேலும் அவர் கூறும் போது ‘ரஜினியின் பின்னாடி இருந்து சில பேர் அவரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதன் படியே அவர் இயங்குகிறார், அவர் கொள்கைகளிலேயே அவர் சில நேரங்களில் முரண்படுகிறார், படத்தில் பேசுகிற வசனத்திற்கு ஏற்ப சிங்கம் தான் சிங்கிளா வரும்னு சொன்னார், அப்புறம் ஏன் பாட்ஷாவில் அவ்ளோ கூட்டத்தை வைச்சுட்டு வந்தாரு, அதுவும் போக பன்னிங்க தான் கூட்டமாக வரும்னும் சொன்னாரு, அதை ரசிகர்களை தான் சொல்லியிருக்காரு’ என்றும் சரமாரியாக விமர்சித்து அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதோடு நிற்காமல் ‘சூட்டிங்கில் அவரின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு அவரைத் தேடி சில பேர் வந்தவர்கள் எல்லாம் இன்று அகோரிகளாக திரிந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் பெற்றோர்கள் எல்லாம் என்னிடமே வந்து சொல்லியிருக்கிறார்கள், இது உண்மை, மேலும் போராடுகிறவர்களை எல்லாம் சமூக விரோதிகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார், இவரை சமீபகாலமாக சில பேர் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் , அது நன்றாகவே தெரிகிறது, இல்லையென்றால் இப்படி எல்லாம் பேசமாட்டார், அவர் அரசியல் பிரவேசம் பற்றியே நான் 27 வருடத்திற்கு முன்பாகவே பேட்டியில் கூறியிருக்கிறேன், அரசியலில் ரஜினி ஒரு சுண்டைக்காய் என்று ’என்றும் ரஜினியை பற்றி புட்டுபுட்டாக வைத்தார் மன்சூர் அலிகான்.

mansoor ali khan