Cinema News
கஞ்சா கும்பலுடன் தொடர்பு?!… மன்சூர் அலிகான் மகனை தூக்கிய போலீசார்!..
நடிகர் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் மகனிடம் கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்சூர் அலிகான்: தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். வில்லனாக நடித்து அசத்தி வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: Thalapathy69: ”ஒன் லாஸ்ட் டைம்”… தளபதி69 டைட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சொன்ன ஹெச்.வினோத்…
சினிமாவை தாண்டி அரசியலிலும் களம் இறங்கி இருந்த மன்சூர் அலிகான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பார். சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட சுயேசையாக நிற்கின்றேன் என்று கூறி படுதோல்வியை சந்தித்திருந்தார்.
இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.
கஜினி, சர்சா மற்றும் துக்ளக். இதில் கடைசி மகன் துக்ளக் தான் படங்களில் நடிக்க தயாராகி இருக்கின்றார். இவர் தனது தந்தை மன்சூர் அலிகான் இயக்கத்தில் கடம்பன் பாறை என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அதைத் தாண்டி தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் துக்ளக் அலிகான்.
தனது மகனை சினிமா துறையில் எப்படியாவது பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார் மன்சூர் அலிகான். இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்பவர்களுடன் நடிகர் துக்ளக் அலிகானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை முதலே அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் அல்லது சந்தேக வளையத்திற்குள் வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. சென்னை திருமங்கலம் காவல்துறையினர் இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையை முன்னெடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Vidamuyarchi: காலர் டியூனை செட் பண்ணிக்கோங்க.. வைரலாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் தீம் மீயுஸிக்
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மீனா போதை மருந்து வைத்திருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மகனிடம் விசாரணை நடைபெற்று வருவது தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.