ஷூட்டிங் போகாமல் முரண்டு பிடித்த மன்சூர் அலிகான்!.. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?..

Published on: April 23, 2023
vijayakanth
---Advertisement---

நடன நடிகராகவும், சண்டை நடிகராகவும் இருந்த மன்சூர் அலிகானை நடிகர் விஜயகாந்த் கேப்ரன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அப்படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மன்சூர் அலிகான். ஏனெனில், தலையை ஆட்டி ஆட்டி வித்தியாசமான உடல் மொழியில் அப்படி நடித்த ஒரு வில்லனை இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்தது இல்லை.

அந்த படம் மூலம் பிரபலமான மன்சூர் அலிகான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக விஜயகாந்த் படம் என்றால் கண்டிப்பாக அவருக்கு ஒரு வேடம் நிச்சயம் இருக்கும். பொதுவாகவே மன்சூர் அலிகான் யாருக்கும் பயப்படமாட்டார். அவரை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமில்லை. சில இயக்குனர்கள் அவரிடம் பேசவே யோசிப்பார்கள். மன்சூ அலிகான் திரையுலகில் பார்த்து பயப்படும் ஒரு நபர் விஜயகாந்த் மட்டுமே. தனக்கு வாழ்வு கொடுத்தவர் என்பதால் விஜயகாந்த் மீது மன்சூர் அலிகானுக்கு எப்போதும் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.

மம்முட்டி நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான திரைப்படம் மறுமலர்ச்சி. இந்த படத்தில் மன்சூர் அலிகானும் நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றபோது மன்சூர் அலிகான் சில காரணங்களால் படப்பிடிப்புக்கு செல்லாமல் தான் தங்கியிருந்த அறையிலேயே இருந்துள்ளார். யார் சென்று அழைத்தும் அவர் வரவில்லை. உடனடியாக இந்த தகவல் விஜயகாந்துக்கு சொல்லப்பட்டது. அந்த லாட்ஜின் தொலைப்பேசி எண்ணில் அழைத்து மன்சூர் அலிகானிடம் பேசியுள்ளார்.

விஜயகாந்த் பேசியதும் ‘இல்ல கேப்டன். இப்பவே போறேன்’ என மன்சூர் அலிகான் மழுப்ப ‘இப்ப ஷூட்டிங் போகலன்னா உன்ன தொலைச்சிடுவேன்’ என விஜயகாந்த் சொன்னதும் போனை வைத்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு மன்சூர் அலிகான் ஓடினாராம்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.