More
Categories: Cinema History Cinema News latest news

நாங்க செத்து அஞ்சு வருஷமாச்சு… கேப்டனின் அஞ்சலி நிகழ்ச்சியில் மன்சூர் உருக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்று கேப்டன் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்…

கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நாங்க செத்துப் போயிட்டோம். எப்போ அண்ணன் கேப்டன் உடல்நிலை எல்லாம் மோசமாகி, அது என்ன ட்ரீட்மெண்ட் ஏதுன்னு எங்களுக்கு சொல்லப்படவில்லை.

Advertising
Advertising

அந்த மனவருத்தம் இருக்கு. அதை இங்கே பேசுறதுல பயனில்லை. என்னால தாங்க முடியல. பார்க்க முடியல. அந்த மாமனிதருக்கு ஏன் இப்படி ஒரு சோதனை வந்ததுன்னு தெரியல. அவர் நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது செயற்குழு உறுப்பினரா இருந்தேன். கேப்டன் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க.

Mansoor Alikhan

கடன் எதுவும் வாங்காம, அவர் பாதையில மொய்விருந்து வச்சி எந்த செலவும் பண்ணாம, அதுல வர்ற வருமானத்தை வச்சி நடிகர் சங்க கட்டடத்தை வலுப்படுத்தலாம். கேப்டன் இருக்கும்போது நடிகர் சங்கம் ராணுவ பலத்தோடு இருந்தது. அப்படி இருக்கும்போது இனியும் அதே போல நாம கொண்டு வரணும். மொய்விருந்தில் சைவம், அசைவம் என்று தனித்தனியாக வைக்க வேண்டும் என்றும் ஆலோசனையில் மன்சூர் அலிகான் கூறினார். மன்சூர் அலிகானின் பேச்சைக் கேட்ட விஜயகாந்த் மகன்கள் இருவரும் கைதட்டி ரசித்தனர்.

வழக்கமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசினால் அதில் ஏதாவது வில்லங்கம் வந்து விடும். ஆனால் கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்ததாலோ, என்னவோ அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது தெள்ளத்தெளிவாகப் பேசி பார்வையாளர்களை அசத்தினார். அப்போது அவர் பேசிய கருத்துகளைக் கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷால் அவரது பேச்சைக் கேட்டு ரசித்தார். மன்சூர் பேசி முடிக்கும்போது இதை விஷாலும், கார்த்தியும் செய்து முடிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

Published by
sankaran v

Recent Posts