Cinema News
ஏற்கனவே இரண்டு முறை அட்டாக் ! இத செஞ்சிருக்கவே கூடாது – மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி
Actor Marimuthu: தமிழ் சினிமா தொடர்ந்து பல நல்ல கலைஞர்களை இழந்து வருகிறது. அதுவும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு, மரியாதை இருக்கும் பிரபலங்கள் தொடர்ந்து நம்மை விட்டு போகும் போது அது ஒரு தாங்க முடியாத இழப்பாக இருக்கிறது. நேற்று நடிகர் மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சின்னத்திரை , வெள்ளித்திரை என இரண்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த மாரிமுத்து இன்று நம்மிடம் இல்லை. நேற்று அதிகாலை பிரபல சீரியலுக்காக டப்பிங் பேசப் போகும் போது டப்பிங் அறையிலேயே அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது.அதனால் வெளியே வந்து அவரே காரை எடுத்து ஓட்டி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
இதையும் படிங்க: வாடகைத்தாய்க்கு பதிலா.. வாடகை அப்பா.. அனுஷ்காவுக்கு கைகொடுத்ததா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி?..
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து காலமானார். இதை பற்றி அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் நிரூபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மாரிமுத்துவின் நிலைமை எந்த நிலையில் இருந்தது என்பதை பற்றி கூறினார். அதாவது இப்படி நெஞ்சுவலி இருக்கும் போது அவரே காரை எடுத்து ஓட்டி வந்திருக்கக் கூடாது என்றும் யாராவது உதவியாளர்களை அவர் வைத்திருக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் அவருடைய பழைய மெடிக்கல் ரிக்கார்டை எல்லாம் பார்க்கும் போது ஏற்கனவே மாரிமுத்துவுக்கு இரண்டு முறை அட்டாக் வந்திருப்பதாகவும் இரத்தக் குழாய்களில் அவர் ஆஞ்சியோ ப்ளாஸ்டிக் செய்திருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் அவருக்கு சர்க்கரை வியாதியும் இருப்பதால் அதற்கு அவர் மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆல் ஏரியாவுல அய்யா கில்லிடா!. 2 நாட்களில் இப்படியொரு வசூலா!.. பாக்ஸ் ஆபிஸ் சரவெடியாய் மாறிய ஜவான்!..
ஏற்கனவே இரண்டு முறை அட்டாக் வந்தவர்கள் பொதுவாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மன அழுத்தத்திற்குள் செல்லாத வகையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் உதவியாளர்களை வைத்து அவர் காரில் வந்திருந்தால் ஓரளவாவது அவரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.