பிக்பாஸுக்கே ஆஃபர் கொடுக்கும் பிரபலம்! புடிச்சு உள்ள தூக்கி போடுங்க - டிஆர்பி எகிறும்

விஜய் டிவி தற்போது பிக்பாஸ் சீசன் 7லில் தன் அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதற்கான புரோமோ சமீபத்தில் தான் வெளியானது. கூடிய சீக்கிரம் இதற்கான தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில் எப்பவும் போல இந்த சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற கருத்துக் கணிப்பு மக்களிடையே நடந்து வருகிறது.

அதில் முதல் ஆளாக செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்திருப்பவர் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து.

இதையும் படிங்க : சும்மா இருக்காம சூடு வச்சிக்கிட்ட ரஜினி… ஆப்பு செம பெரிசா இருக்கும் போலயே!

மாரிமுத்துவின் பேச்சும் நடத்தையும் சீரியலை பொருத்தவரைக்கும் பார்க்கும் ரசிகர்களுக்கு கடுப்பை தான் ஏற்படுத்துகின்றது. அந்த அளவுக்கு முகத்தை கடு கடுவென வைத்து எல்லாரிடமும் எறிஞ்சு விழுவார். அப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ரசிகை ஒருவர் ஒரு வேளை நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு மாரிமுத்து பிக்பாஸ் என்பது ஒரு பெரிய ப்ளாட்ஃபார்ம், அதில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகலாம். ஆனால் இப்போது நான் ஒரு நீண்ட ப்ராஜக்ட்டில் இருக்கிறேன்.

இதையும் படிங்க : தளபதி 68-ல் மேலும் ரெண்டு ஹீரோக்கள்!. வேலையை காட்டும் வெங்கட்பிரபு!. பிரேம்ஜி மட்டும்தான் பாக்கி!…

அந்த சீரியலை விட்டு எங்கேயும் நகரமுடியாது. ஒரு வேளை பிக்பாஸ் வீட்டிற்கு போனால் வீட்டை இரண்டாக்காமல் விட மாட்டேன். ஒரு உலுக்கு உலுக்கிட்டுதான் வருவேன். மேலும் நான் இந்த சீசனுக்குள் போனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் தான் முதலிடத்தில் இருக்கும் என்று கூறினார்.

ஒரு வேளை இவரது பேட்டியை விஜய் டிவி பார்த்தால் இந்த ஒரு ஆளு போதுமே, நமக்கு டிஆர்பிதான முக்கியம் என்று கோடிகளை கொடுத்து தூக்கிட்டு போயிடுவார்கள்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it