ஒரு ரசத்துக்கு 70 ஆயிரம் கொடுத்த மனுஷன பாத்துருக்கீங்களா? யாரும் கண்டிராத மயில்சாமியின் மறுபக்கம்

by Rohini |   ( Updated:2024-02-12 07:28:35  )
mayil
X

mayil

Actor Mayilsamy: சிறுவயதில் இருந்தே எம்ஜிஆர் படங்களை பார்த்து சினிமாவிற்கு வந்த எத்தனையோ நடிகர்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் எம்ஜிஆரை கடவுளாக பாவித்து வந்தவர் நடிகர் மயில்சாமி. எந்தவொரு மேடையானாலும் அங்கு எம்ஜிஆர் பாடல்களை பாடாமல் அவருடைய பேச்சு நிறைவு பெறாது.

தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த ஒரு மனிதராகவும் திகழ்ந்தவர். யாருக்கு எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் உதவி செய்யக் கூடியவர்.

இதையும் படிங்கள்: கோட்டை அழிங்க முதலேந்து ஆரம்பிப்போம்… விடுதலை 2 படத்தில் நடக்கும் களேபரம்… ஒரு சர்ப்ரைஸ் வேற இருக்காம்…

ஆரம்பத்தில் இருந்தே கொடுத்து கொடுத்து பழகிய கைகள் . இந்த நிலையில் மயில்சாமியை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை காமெடி நடிகர் கணேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது ஒரு பட சூட்டிங்கின் மதிய உணவு இடைவெளியில் ப்ரடக்‌ஷனில் இருந்துதான் சாப்பாடு வருமாம். ஆனால் அன்று வெளியூர் படப்பிடிப்பு என்பதால் அருகில் இருந்த சில வீடுகளுக்கு சென்று மயில்சாமி அங்கு இருந்த பெண்களிடம் ‘அக்கா கரிக்குழம்பு, மீன் குழம்பு வச்சு தாங்க’ என பாசத்துடன் கேட்டிருக்கிறார். மயில்சாமியின் அன்பை பார்த்து அவர்களும் வச்சு கொடுத்தார்களாம்.

இதையும் படிங்க: பாம்புனா கொத்ததான் செய்யும்.. என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா? வடிவேலுவை தோலுரித்த ஆர்த்தி

ரசம் மட்டும் அந்த மதிய உணவில் மிஸ் ஆகியிருக்கிறது. உடனே மயில்சாமி இன்னொரு பெண்மணியை அழைத்து ‘அக்கா ஒரு 20 பேருக்கு ரசம் வச்சு கொடு’ என உரிமையோடு சொல்லியிருக்கிறார். அனைவரும் சாப்பிட்ட பின்பு மயில்சாமி கரிக்குழம்பு வச்ச பெண்ணுக்கு 2000 ரூபாய், மீன் குழம்பு வச்ச பெண்ணுக்கு 2000 ரூபாய் என கொடுத்து,

ரசம் வைத்த பெண்ணை அழைத்து ‘அக்கா இந்தா 2000 ரூபாய்’ என சொல்லி கொடுக்க அதற்கு அந்த பெண் ‘அக்கானு சொல்லி இப்படி ரூபாய் கொடுத்து கஷ்டப்படுத்துறீயே’ என அந்த ரூபாயை வாங்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த பெண் அவருடைய நிலைமை மயில்சாமியிடம் சொல்லியிருக்கிறார். அதாவது அவருக்கு 70 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் என் மகன் வளர்ந்துதான் அந்த கடனை அடைப்பான் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: காதலர் தினத்துக்கு சர்ப்பரைஸ் கொடுக்கப் போகும் அஜித்!.. அப்பாடா இப்பவாவது சொல்றீங்களே!..

உடனே மயில்சாமி படத்தின் ப்ரடக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘ நான் நான்கு நாள்கள் நடித்திருக்கிறேன். அதற்கான ரூபாய் 70000 கொடு. இல்லைனா மேக்கப் போட மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மேனேஜர் 50000 தான் கொடுத்தாராம். மேலும் 20000ஐ தன் கணக்கில் இருந்து எடுத்து மொத்தம் 700000 தொகையை அந்த பெண்ணுக்கு கொடுத்து உதவினாராம்.

இந்தளவுக்கு உடனடியாக உதவ மயில்சாமி ஒன்றும் கோடீஸ்வரனும் இல்லை. கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கக் கூடிய பெரிய நடிகரும் இல்லை. அடிப்படையில் ஒரு சிறந்த நல்ல மனிதர். கோடி கோடியாக சம்பளம் வாங்கிக் குவிக்கும் எந்த நடிகருக்காவது இப்படி ஒரு மன நிலை வருமா என யோசிக்க வேண்டும்.

Next Story