மயில்சாமி மகனுக்கு இப்படி ஒரு அவமானமா? விஷயம் தெரிஞ்சு ரஜினி சும்மா இருப்பாரா என்ன?

Published on: January 10, 2024
rajini
---Advertisement---

Actor Rajini: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார். தன் லைன் அப்பில் அடுத்தடுத்து மாஸ் இயக்குனர்களுடனும் சேர்ந்து பணிபுரிய இருக்கிறார்.

இந்த நிலையில் ரஜினியை நேசிக்கும் நடிகர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மயில்சாமியை பொறுத்தவரைக்கும் ரஜினி ஒரு மாமேதையாகத்தான் அவருக்கு தெரிந்தார். ரஜினி மீது அலாதி பற்று கொண்டவராகவும் ரஜினி விளங்கினார்.

இதையும் படிங்க: மிருணாள் தாக்கூரை விட்டுட்டு ராசியில்லாத நடிகையை ஓகே செய்யும் சிவகார்த்திகேயன் டீம்!… தப்புல!

அவரின் மறைவு ரஜினியையும் பெருமளவு பாதித்தது. வாரி வழங்கும் கொடை வள்ளலாகத்தான் மயில்சாமியும் இருந்து வந்தார். கையில் பணம் சிறிதளவே இருந்தாலும் இல்லை என்று வருவோர்க்கு எதையும் யோசிக்காமல் இருக்கிறதை கொடுத்து மகிழ்வார்.

இவரின் மறைவு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்  மயில்சாமியின் மகன் படத்திலும் நடித்து வருகிறார். அதுவும் லால்சலாம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: சைனிங் கன்னத்தை குளோசப்பில் காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்!. எக்கச்சக்கமா குவியுது லைக்ஸ்…

ஒரு சமயம் ரஜினியின் உதவியாளரான சுப்பையா  மயில்சாமியின் மகனிடம் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ‘ரஜினியை பார்த்தீயா’ என கேட்டிருக்கிறார். அதற்கு மயில்சாமியின் மகன் ‘ஆமாம். ஆனால் அவர் பிஸியாக இருக்கிறார். அப்புறம் பேசிக் கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். ஆனாலும் உதவியாளர் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு ரஜினியின் முன் நிறுத்தினாராம்.

உடனே ரஜினியை பார்த்து சுப்பையா ‘இவர் யார் என தெரிகிறதா? உங்க கூட கபாலி படத்தில் நடித்தாரே தினேஷ். அவர்தான்’ என சொன்னதும் ரஜினி சிரிக்க , மயில்சாமியின் மகனுக்கு ஷாக்காகி விட்டதாம். கொஞ்சம் நேரம் கழித்து ரஜினியே ‘இது  மயில்சாமியின் மகன்’ என்று சொல்ல, மயில்சாமியின் மகனுக்கு ஏதோ விருதே கிடைத்த ஒரு சந்தோஷமாம். இருந்தாலும் அட்டகத்தி தினேஷ் முகச்சாயல்தான் மயில்சாமியின் மகனுக்கும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக அஜித்திடம் போராடிய இயக்குனர்!… சொல் பேச்சு கேட்கலைல வாய்ப்பே கிடையாது!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.