Connect with us

ஒரு வாரமா கோமாவுல இருந்தீங்களா.?! அஜித்துக்கு வாழ்த்து கூறி வம்பில் மாட்டிக்கொண்ட ‘அந்த’ நடிகை.!

Cinema News

ஒரு வாரமா கோமாவுல இருந்தீங்களா.?! அஜித்துக்கு வாழ்த்து கூறி வம்பில் மாட்டிக்கொண்ட ‘அந்த’ நடிகை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கிய நடிகராக இருக்கிறார் நடிகர் அஜித் குமார். இவர் தனது வேலை நடிப்பது மட்டுமே என்று ஷூட்டிங் தவிர மற்ற நேரங்களில் இவரை பொது வெளியில் பார்ப்பது அரிது. அதிலும் சினிமா நிகழ்ச்சிக்கு முற்றிலும் நோ தான்.

ajith_main_cine

ஆனால், இவர் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்றாலும், இவரது படம் பற்றிய தகவல் என்றாலோ, அல்லது இவரது பிறந்தநாள் என்றாலோ ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். இணையத்தை ஒரு வழி ஆக்கிவிடுவர்.

கடந்த மே மாதம் 1ஆம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வந்தனர். ஆனால், ஒரு நடிகை வாழ்த்து கூறியுள்ளார் ஆனால் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஏனென்றால், அவர் வாழ்த்து தெரிவித்தது இன்று. ஆம், 7 நாள் கழித்து இன்று தான் அஜித் பிறந்தநாள் என்று தவறுதலாக நினைத்து கொண்டு அந்த நடிகை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவித்துவிட்டார்.

இதையும் படியுங்களேன் – என்னது., நயன்தாராவுக்கு ஏற்கனவே திருமணம் முடிஞ்சிருச்சா.?! ஆடிப்போன ரசிகர்கள்.!

எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கி இருந்த அன்பே ஆருயிரே திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்த நிலா ( உண்மையான பெயர் மீரா சோப்ரா) தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்குமார். ஓர் நல்ல நடிகர் அஜித். என்று பதிவிட்டு விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த பிறந்தநாள் வாழ்த்துக்கு கீழே வழக்கமான அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து விட்டனர்.

ஒரே ஓரு வாழ்த்து கூறி இப்படி வம்பில் மாட்டிக்கொண்டோமே என அந்த நடிகை தற்போது விழித்துக்கொண்டு இருக்கிறாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top