Connect with us

எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த இரண்டு திரைப்படங்கள் -அதற்கு அவரே சொன்ன காரணம் இதுதான்

mgr

Cinema History

எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்த இரண்டு திரைப்படங்கள் -அதற்கு அவரே சொன்ன காரணம் இதுதான்

திரையுலகில் 1950 மற்றும் 60களில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடிக்க துவங்கி பல வருடங்களுக்கு பின் சினிமாவில் நுழைந்தவர். ராஜகுமரி படம் மூலம் கதாநாயகனாக நடிக்கதுவங்கி மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பெரிய ஹீரோவாக மாறியவர்.

mgr

எம்.ஜி.ஆர் எதையுமே சரியான திட்டமிடலுடன் செய்வார். ஒரு படம் துவங்கினால் இயக்குனர், தயாரிப்பாளர், இசை, பாடல்கள், படத்தின் வசனம் என எல்லாவற்றிலும் கவனத்துடன் இருப்பார். குறிப்பாக தன்னால் தயாரிப்பாளுக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என நினைப்பார். அதேபோல், அவரால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்தது இல்லை.

அதேநேரம் இரண்டு படங்களில் சில நாட்கள் மட்டும் நடித்துவிட்டு அப்படத்திலிருந்து வெளியேறிய செய்தி பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம். ஒரு செய்தியாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆரிடம் ‘நீங்கள் சில படங்களில் நடிக்க மறுத்ததாகவும், ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும், அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாகவும் பேசுப்படுகிறுதே’ என கேட்டனர்.

mgr

அதற்கு பதில் சொன்ன எம்.ஜி.ஆர் ‘அது தவறான செய்தி. நான் அப்படி நடிக்க மறுத்த திரைப்படங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று காத்தவராயன் திரைப்படம். அந்த படத்தில் நிறைய மாந்திரீக காட்சிகள் இருந்தது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் அந்த காட்சியை நீக்க மறுத்தனர். அதனால் அப்படத்திலிருந்து நான் விலகினேன். நான் நடிக்கும் படங்களில் தவறான கருத்துக்களை பரப்பும் காட்சிகள் இருக்க கூடாது என நினைப்பதே அதற்கு காரணம். ஆனால், நான் கடவுளை கும்பிட மறுத்ததாக செய்திகளை பரப்பிவிட்டனர்.

mgr

அடுத்து நான் நடிக்க மறுத்த திரைப்படம் லலித்தாங்கி. அப்படத்தில் கதாநாயகன் ‘பெண்கள் எல்லாம் விபச்சாரிகள்’ என பேசுவது போல் ஒரு காட்சி வருகிறது. தாய்குலத்தை மதிக்க வேண்டும் என சொல்லி வரும் நான் எப்படி அந்த வசனத்தை பேசுவேன். லட்சக்கணக்கான இளைஞர்கள் நான் நடிக்கும் திரைப்படங்களை பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது நான் எப்படி அப்படி ஒரு வசனத்தை பேசி அவர்களின் மனதில் நஞ்சை விதைக்க முடியும்?. அதனால்தான் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’ என விளக்கமளித்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top