More
Categories: Cinema History Cinema News latest news

ரசிகர்கள் முன்பே எம்.ஜி.ஆரை ‘வாடா போடா’ என அழைத்த அந்த இயக்குனர்!. அப்புறம் என்னாச்சி தெரியுமா?..

Actor MGR: திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போல யாருக்கும் அதிகமான ரசிகர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதனால்தான். அவரால் அரசியலிலும் நுழைந்து மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க முடிந்தது. அவருக்கு ஒன்றென்றால் அவரின் ரசிகர்கள் பதறிப்போவார்கள்.

சினிமாவில் நம்பியார் எம்.ஜி.ஆரை நடித்தால் அவர்களுக்கு நம்பியார் மீது கோபமே வரும். எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆரை நம்பியார் பிரம்பால் அடிப்பதை பார்த்து கொதித்து போன அவரின் ரசிகர்கள் மீதி காட்சிகளை கூட பார்க்க பொறுமையில்லாமல் தியேட்டரிலிருந்து வெளியேறி நம்பியாரின் வீட்டின் முன்பு நின்று பெரிய ரகளையே செய்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..

அதன்பின் எம்.ஜி.ஆர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த கதையெல்லாம் நடந்தது. அதேபோல், நம்பியார் காரில் சென்றபோதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் அவரை வழிமறித்து ‘எங்கள் வாத்தியாரை நீ எப்படி அடிக்கலாம்?’ என சண்டை போட்டனர். இதை நம்பியாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

1940களில் பெரிய இயக்குனராக இருந்தவர் டி.ஆர்.ரகுநாத். 30 திரைப்படங்களுக்கு மேல் இவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சினிமாவில் வளர்ந்துகொண்ட நேரத்தில் எப்போதும் அவர் ‘வாடா போடா’ என்றும் பெயரிட்டும்தான் எம்.ஜி.ஆரை அழைப்பார். எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ‘மதுரை வீரன்’ படத்தை முதலில் இயக்கியது இவர்தான்.

இதையும் படிங்க: தயாரிப்பாளருக்கே சமையல் செய்து கொடுத்த எம்.ஜி.ஆர்..! ஆனா இந்த ட்விஸ்ட் தான் சூப்பரே..!

ஒருமுறை அந்த படத்தின் படப்பிடிப்பில் தன்னை காண வந்த ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர் பேசிக்கொண்டிருந்த போது ‘ டேய் ராமச்சந்திரா இங்கே வாடா’ என ரகுநாத் அழைக்க எம்.ஜி.ஆருக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. இது அங்கிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதில் ஒருவர் ‘இவரை எங்கு பார்த்தாலும் நான் கல்லால் அடிப்பேன்’என சொல்ல எம்.ஜி.ஆர் அதிர்ந்து போனார். அவர்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தார்.

ரகுநாத்திடம் சென்று ‘பொதுவெளியில் என்னை ‘வாடா போடா’ என அழைக்காதீர்கள். தனிமையில் என்னை நீங்கள் அப்படி அழைப்பதில் எனக்கு அந்த ஆட்சேபனையும் இல்லை’ என சொல்ல அதை ரகுநாத்தும் புரிந்துகொண்டார். ஆனாலும், அவரால் தன்னை மாற்றிக்கொள்ளமுடியவில்லை. எனவே, அந்த படத்திலிருந்து அவர் விலகிவிட யோகானந்த் என்பவரை வைத்து அப்படத்தை முடித்தனர்.

இதையும் படிங்க: கலைஞர் வசனத்தால் தோல்வி அடைந்த எம்.ஜி.ஆர் படம்… ரூட்டை மாற்றியிய பொன்மன செம்மல்!..

 

Published by
சிவா

Recent Posts