தாமதமாக வீடு திரும்பிய லதாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அதிர்ச்சி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!..
எம்.ஜி.ஆர் எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைகளை தனது பார்வையிலிருந்து பார்ப்பார். அவர் எல்லோரும் உதவுவார் என்பது மட்டும்தான் மற்றவர்களுக்கு தெரியும். ஆனால், இது நடந்தால் இவர்கள் என்ன பிரச்சனையை சந்திப்பார்கள் என அதையும் சேர்த்து எம்.ஜி.ஆர் யோசிப்பார்.
அவரின் சமையல்காரர் ஒருமுறை யாரோ சொல்வதை கேட்டு அவரின் உணவில் விஷம் வைத்த போது கூட அவருக்கு பெரும் தொகையை கொடுத்த அனுப்பி வைத்தார். ‘இங்கிருந்து சென்றுவிட்டால் அவருக்கு வேறு வேலை கிடைக்காது. அவர் வாழ என்ன செய்வார்?’ என அந்த பார்வையில் யோசித்தவர் எம்.ஜி.ஆர்.
உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துகொண்டிருந்த போது அந்த படத்தில் நடித்துவந்த நடிகை லதா தனது தயாருடன் திருப்பதிக்கு சென்று வர அப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதரிடம் அனுமதி கேட்டார். ஆனால், லதா சம்பந்தப்பட்ட பல காட்சிகள் எடுக்க வேண்டியிருந்ததால் ஸ்ரீதர் அனுமதி கொடுக்கவில்லை.
அதன்பின் எம்.ஜி.ஆர் அவரிடம் பேசி குறிப்பிட்ட நேரத்திற்குள் லதா வந்துவிடுவார் என அனுமதி வாங்கி கொடுத்தார். ஆனால், திருப்பதியிலிருந்து லதா திரும்பியபோது அவரின் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அதை சரிசெய்து வரும்போது டயர் வெடித்துவிட்டது. எனவே, ஒரு பேருந்தை பிடித்து அம்மாவுடன் சென்னை வந்தார் லதா. இரவு 8 மணி ஆகிவிட்டதால் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றார் லதா.
அப்போது அவரின் வீட்டில் இருந்த லதாவின் தம்பி தங்கைகளுக்கு எம்.ஜி.ஆர் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். மேலும், ஒரு கேரியரில் லதா மற்றும் அவரின் அம்மாவுக்கும் உணவு இருந்தது. இன்ப அதிர்ச்சி அடைந்த லதா ‘இது எப்படி சாத்தியம்?’ என கேட்க, எம்.ஜி.ஆர் ‘உன்னுடைய கார் பஞ்சரானதும் டிரைவர் டிரங் கால் மூலம் எனக்கு தெரியப்படுத்திவிட்டார். நீ வர தாமதமாகும். வீட்டில் குழந்தைகள் பசியுடன் இருப்பார்கள் என்பதால் உணவு கொண்டு வந்தேன்’ என எம்.ஜி.ஆர். சொல்ல லதா நெகிழ்ந்து போய்விட்டாராம்.
இந்த சம்பவத்தை லதாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.