திடீரென இறந்துபோன இயக்குனர்.. அவரின் குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் செய்த பேருதவி...
mgr br bandlu: சிறு வயது முதலே கஷ்டத்தை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ எப்போதும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. கஷ்டப்படும்போது சரி, சினிமாவில் பெரிய ஹீரோவாக மாறிய பிறகும் சரி.. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறிய பிறகும் சரி.. பலருக்கும் உதவியிருக்கிறார்.
அவர் கண் முன் யார் கஷ்டப்படுவதை பார்த்தாலும் உடனே அவருக்கு உதவும் குணம் கொண்டவர் எம்.ஜி.ஆர், திரையுலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், ஏழைகள் என பலரும் அவரால் உதவி பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர் என்றதும் நடிகர் என சொல்லாமல் அவரை வள்ளல் என அனைவரும் நினைவு கூர்கின்றனர்.
இதையும் படிங்க: இது என்னோட படமே இல்ல!… சூப்பர் ஹிட் படத்தை பற்றி எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!..
பல நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் கஷ்டப்பட்ட நேரங்களில் உதவியிருக்கிறார். கண்ணதாசன் உட்பட பலரும் கடனாளியாகி வீட்டை இழக்கும் நிலை வந்தபோது அவர்களுக்கு உதவியிருக்கிறார். சிவாஜியை வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு.
சிவாஜி நடித்த தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட சிவாஜியின் முக்கிய படங்களை இயக்கியவர் இவர். சில படங்களினால் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனபோது அவரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தினால் கடனிலிருந்து பி.ஆர்.பந்துலு மீண்டார்.
இதையும் படிங்க: கதறி அழுத உதவியாளர்… அதை பார்த்து சிரிச்ச எம்.ஜி.ஆர்!.. என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?…
மேலும். எம்.ஜி.ஆரை வைத்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய போது படம் முடியும் முன்பே பந்துலு இறந்துபோனார். எனவே, குடும்பம் தத்தளித்தது. அப்போது அவருக்கு கடன்களும் இருந்தது. அப்போது அவரின் குடும்பத்தினருக்கு உதவியது எம்.ஜி.ஆர்தான்.
இதுபற்றி சொன்ன பந்துலுவின் மகள் விஜயலட்சுமி ‘படத்திற்காக அப்பா கடன் வாங்கியிருந்தார். படமோ முடியவில்லை. என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை. குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தோம். அப்போதுதான் எம்.ஜி.ஆர் வந்தார். கடன் அனைத்தையும் அடைத்தார். மேலும், அவரே பணத்தை செலவு செய்து மீதி படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து அதில் வந்த லாபத்தை எங்களுக்கு கொடுத்தார். எங்களை பொறுத்தவரை எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வந்த தேவதூதர் அவர்’ என நெகிழ்ந்து பேசினார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சலிக்க சலிக்க பார்த்த சிவாஜி படம் அதுதான்!.. அவ்வளவு தீவிர ரசிகரா?!..