பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட காமெடி நடிகர்! எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தையால் கொடிகட்டி பறந்த சம்பவம்

எம்ஜிஆர் - இதை உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்பது போல மக்கள் திலகத்தை பற்றி நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கும் செய்தியால் ஏன் இவருக்கு ஆண்டவன் மரணத்தை எழுதினான் என்று கேட்க வைக்கிறது. இவருக்கு சாவே கிடையாது என்ற விதியை எழுதியிருந்தால் இன்று பல பேர் எம்ஜிஆரால் நல்ல நிலைமைக்கு சென்றிருப்பார்கள்.

இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவரை பற்றி சில விஷயங்கள் தெரிந்திருக்க கூடும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு எம்ஜிஆரை பற்றி வரும் செய்திகள் பெரும் ஆச்சரியத்தைத்தான் வரவழைக்கிறது.

இதையும் படிங்க : கமல், விக்ரம் பாணியை ஃபாலோ பண்ணும் விஜய் சேதுபதி.. இனிமே அப்படி செய்ய மாட்டாராம்..

ஒரு சமயம் பிரபல காமெடி நடிகர் ஒரு விரல் கிருஷ்ணராவ். ஒரு விரல் என்ற படத்தில் முதன் முதலில் நடித்ததனால் இந்தப் பெயரை பெற்றார். பிரபலமாக இல்லாத சமயத்தில் படத்தில் நடித்தால் தான் காசு என்ற நிலைமைதான் அப்பொழுது. ஒரு மாத வாழ்க்கையை ஓட்ட வேண்டுமென்றால் 250 ரூபாய் தேவைப்படும்.

எப்படியோ குடும்பத்தை சமாளித்துக் கொண்டிருந்த கிருஷ்ணராவுக்கு திடீரென படங்கள் எதுவும் வரவில்லையாம். அதனால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறார். யாரிடம் கேட்கலாம்? குழந்தைகளை படிக்க வைக்கக் கூட காசு இல்லாமல் தவித்து வந்த கிருஷ்ணராவுக்கு திடீரென எம்ஜிஆர் நியாபகம் வர நேராக தோட்டத்திற்கு போன் செய்திருக்கிறார்.

எதிர்பாராதவிதமாக அந்த போனை எம்ஜிஆரே எடுக்க நடந்த எல்லாவற்றையும் கூறி 250 ரூபாய் கொடுத்தால் புண்ணியமாக போகும் என கிருஷ்ணராவ் சொல்ல மறு நாள் எம்ஜிஆர் அவரை வரச் சொல்லியிருக்கிறார்.எம்ஜிஆர் சொன்னபடியே இவரும் தோட்டத்திற்கு செல்ல வந்ததும் உதவியாளர்கள் கிருஷ்ணராவை சாப்பிட வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : 1000 பெரியாரை கண்முன் நிறுத்திய பாலா – கோயிலுக்கு வெளியே இருந்த பிச்சைக்காரனை அழைத்து என்ன செய்தார் தெரியுமா

அதன் பிறகு ஒரு உதவியாளர் கவரை எடுத்து வந்து கிருஷ்ணராவிடம் கொடுக்க அதை பிரித்து பார்த்த கிருஷ்ணராவிற்கு அதிர்ச்சி.அதில் 2000 ரூபாய் இருந்ததாம். உடனே எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என கிருஷ்ணராவ் ஆசைப்பட சிறிது நேரம் கழித்து எம்ஜிஆரே தரிசனம் கொடுத்திருக்கிறார்.

அதன் பிற்கு கிருஷ்ணராவிடம் இனிமேல் உனக்கு நல்ல காலம் தான். பயப்படாமல் போ என சொல்லி அனுப்பியிருக்கிறார். எம்ஜிஆரின் வாய் முகூர்த்தம் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது. எம்ஜிஆரின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினாராம்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it