பேப்பரில் வந்த விளம்பரம்!. எம்.ஜி.ஆர் வைத்த செக்!.. ஆடிப்போன சிவாஜி...
திரையுலகம் என்றாலே போட்டி எப்போதும் இருக்கும். அதையும் தாண்டிதான் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும். வெற்றி பெறுவது போராட்டம் எனில் அதை வைக்க வைக்கவும் கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி படங்களை கொடுத்தால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தேடி செல்ல மாட்டார்கள்.
சினிமாவில் போட்டி இருந்தாலும் இரு நடிகர்களுக்கான போட்டி என்பது எப்போது இருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முதல் விஜய் - அஜித் காலம் வரை இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதாவது கருப்பு வெள்ளை காலம் முதல் தற்போதையை டிஜிட்டல் சினிமாவை வரை இது மாறவே இல்லை.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் நடந்த ஒரு போட்டி சம்பவத்தைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். சிவாஜி நன்றாக நடிக்க தெரிந்தவர். சிறந்த நடிகர், பல வேடங்களிலும் அசத்தலான நடிப்பை கொடுத்தவர். ஆனால், அந்த பக்கம் எம்.ஜி.ஆர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, இயக்கம் என கலக்கியவர்.
கருப்பு வெள்ளை காலத்திலேயே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து, இயக்கி வெற்றி கண்டவர். இவர் படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் 52 மெட்டு போட்டு பிடிக்காமல் 53வது மெட்டைத்தான் ஓகே செய்தார் எம்.ஜி.ஆர். அந்த அளவுவுக்கு இசைஞானமும் உள்ளவர் எம்.ஜி.ஆர்
சிவாஜி தயாரித்து நடித்த திரைப்படம் ‘புதிய பறவை’. இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது செய்திதாளில் இப்படத்திற்காக ஒரு விளம்பரம் வந்தது. அதில், இயக்கம் தாதா மிராஷி, என்றும் இயக்கம் மேற்பார்வை சிவாஜி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது எம்.ஜி.ஆர் தாழம்பூ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அடுத்தநாள் அதே செய்திதாளில் தாழம்பூ படத்தின் முழுபக்க விளம்பரம் வந்தது. அதில், இயக்கம் ராமதாஸ் எனவும், இயக்கம் மேற்பார்வை எம்.ஜி.ஆர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைபார்த்ததும் இது நமக்கான செக் என்பதை சிவாஜி புரிந்து கொண்டார். அதன்பின் புதிய பறவை விளம்பரத்தில் தயாரிப்பு மேற்பார்வை சிவாஜி என்பது நீக்கப்பட்டது.
சினிமாவில் போட்டி இருந்தாலும் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் சிவாஜி. அண்ணன் என்றே அழைத்தவர். அதேபோல், சிவாஜி சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பலரிடமும் கூறினார். இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நண்பர்கள்தான்.. ஆனால்? விஜயுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பில்லை!.. அன்றே வெளிப்படையாக கூறிய அஜித்!..