
Cinema History
எம்.ஜி.ஆருக்கு அவர் நடிப்பில் பிடித்தது 2 படங்கள் மட்டுமே!.. என்ன காரணம் தெரியுமா?..
திரையுலகில் முன்னணி நடிகராகவும், முக்கிய நடிகராகவும் வலம் வந்தவர் மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னாளில் சினிமா நடிகராக மாறியவர். தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறினார்.

mgr
1936ம் வருடம் முதல் 1978 வரை பல படங்களிலும் அவர் நடித்துள்ளார். இறுதியில் அவரது உடல் ஒத்துழைக்காமல் போனதால் அவரால் நடிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் பல படங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் என பல படங்களை சொல்லி கொண்டே போகலாம்.
ஆனால், எம்.ஜி.ஆருக்கு அவர் நடித்ததில் இரண்டு திரைப்படங்கள் அவருக்கு மிகவும் பிடித்த படங்களாக இருந்தது. ஒன்று என் தங்கை மற்றொன்று பெற்றால்தான் பிள்ளையா ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. என் தங்கை படத்தில் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்புள்ள நபராக எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. ஒருகட்டத்தில் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வது போல் கூட இப்படத்தில் காட்சிகள் இருக்கும். இப்படத்தில் சிறப்பான நடிப்பை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் 1952ம் வருடம் வெளியானது.
அதேபோல், பெற்றால்தான் பிள்ளையா படத்தில் எம்.ஜி.ஆரின் நடையே வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் அவரின் மாறுபட்ட நடிப்பை பார்க்க முடியும். செல்லக்கிளியே மெல்லப்பேசு பாடலில் எம்.ஜி.ஆர் மிகவும் தத்ரூபமாக நடித்திருப்பார். இந்த படம் சார்லி சாப்ளின் நடித்த The Kid படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் 1966ம் வருடம் வெளியானது.