சலிப்புடன் நடித்த சிவாஜி!.. கோபம் வரும்போதெல்லாம் எம்.ஜி.ஆர் கேட்ட பாடல்!.. என்ன பாட்டு தெரியுமா?!..
இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964ம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆண்டவன் கட்டளை” . விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரையும் வைத்து படங்களை இயக்கியவர் இயக்குனர் கே.சங்கர் இப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் சிவாஜியை வைத்து முருகனின் அறுபடை வீடுகளில் வைத்து ஒரு பாடல் காட்சியை எடுக்கப் போவதாக சொல்ல, சிவாஜியோ ‘ஒரு பாடலுக்கு இத்தனை இடங்களில் வைத்து எடுக்க வேண்டுமா?’ என்று சலிப்புடன் கேட்க, ‘ இந்த பாடல் காட்சி உங்களுக்குப் பெரிய அளவு பெயர் தேடித்தரும், அதனால் நீங்கள் சிரமப்பட்டுதான் ஆகவேண்டும் இது முருகனின் கட்டளை’ என்று சங்கர் கூறியுள்ளார். சிவாஜி எழுந்து நின்று கைக்கட்டி ‘ சித்தம் முருகா உன் சித்தம் முருகா’ என்றாராம்.
நடிகர் திலகத்தின் நடிப்பில் இந்த பாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. அந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த பாடல் பற்றி சங்கரிடம் பேசிய எம்.ஜி.ஆர் கண்ணதாசன் எழுத்திலும், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலும், தம்பி சிவாஜியின் அற்புத நடிப்பிலும் அந்த பாடலில் ஒரு தெய்வ அம்சம் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் எனக்குக் கோபம் வரும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்டால் மனம் சாந்தமாகிறது என்று எம்.ஜி.ஆர் கூறினாராம்.
சிவாஜி நடித்த எத்தனையோ படங்களைப் பற்றி எம்.ஜி.ஆர் சிலாகித்து பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
இதையும் படிங்க: கைதிக்கு முன்னாடி நடக்குற கதைதான் லியோ! – ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..