எம்.ஜி.ஆர் தூங்கியபோது வெடித்த துப்பாக்கிக் குண்டு!.. ஓடும் காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

எம்.ஜி.ஆருக்கு வேட்டையாடுவது மிகவும் பிடிக்கும். எனவே, எப்போதெல்லம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கொக்கு சுடும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்னையை சுற்றி நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கு போய் விடுவாராம். துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதற்கும், குறிப்பாக குறிபார்த்து சுடுவதற்கும் இது நல்ல பயிற்சியாக இருக்கும் என அவர் நம்பியிருக்கிறார்.

அதனால் தொடர்ந்து வேட்டைக்கு போகும் பழக்கம் அவரிடம் இருந்தது. அப்படி ஒருமுறை தனது காரில் ஒரு காட்டுப்பகுதிக்கு வேட்டையாட சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரின் டிரைவர் காரை ஓட்ட எம்.ஜி.ஆரோ கொக்குகளை சுட்டுக்கொண்டே வந்திருக்கிறார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் களைப்படைந்தார் எம்.ஜி.ஆர்.

எனவே, துப்பாக்கிய தனது கால்களுக்கு நடுவே நிறுத்தி வைத்து விட்டு அப்படியே தூங்கிவிட்டார். மதுராந்தகம் அருகேயுள்ள அச்சரப்பாக்கம் என்கிற பகுதியில் கார் சென்ற போது துப்பாக்கி தானாக வெடித்து அந்த குண்டு அவரின் தலையணையை துளைத்து கார் கதவில் பாய்ந்திருக்கிறது.

துப்பாக்கிக் குண்டு எப்படி வெடித்தது என எம்.ஜி.ஆருக்கும் புரியவில்லை. கார் ஓட்டுனருக்கும் தெரியவில்லை. தூக்க கலக்கத்தில் எம்.ஜி.ஆரே தனது துப்பாக்கியை மிதித்துவிட்டாரா என்றும் தெரியவில்லை என எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியே ஒருமுறை இதுபற்றி சொல்லி இருந்தார்.

கொஞ்சம் தவறி இருந்தாலும் குண்டு எம்.ஜி.ஆரின் மீது பாய்ந்திருக்கும். நல்லவேளையாக அன்று அப்படி நடக்கவில்லை. வேட்டையான போனபோது நடந்த இந்த சம்பவம் யாருக்குமே தெரியாது எனவும் எஸ்.ஜானகி பதிவு செய்திருந்தார். ஒரு சண்டையில் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டார்.

துப்பாக்கி குண்டு அவரின் தொண்டையில் பாய்ந்து தனது குரல் வளத்தை இழந்தார். ஆனாலும், மனம் தளராமல் மீண்டும் சினிமாவில் பேசி நடித்து ஒரு மிகப்பெரிய ஆளுமையாக எம்.ஜி.ஆர் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it