படப்பிடிப்பில் நடந்த விபரீதம்!.. சரோஜாதேவியை திடீரென தள்ளிவிட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..

by சிவா |   ( Updated:2023-01-29 12:41:44  )
mgr
X

mgr

எம்.ஜி.ஆர் என்றால் உதவும் கரம், அன்புகரம் என நல்ல குணங்களுக்கு என்ன பெயர்கள் இருக்கின்றதோ அத்தனையும் ஓரே உருவமாக இருக்கும் மனிதர்தான் புரட்சித்தலைவர். அதேபோல், தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

mgr

mgr

எ.வி.ம் நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சிம்லாவில் நடைபெற்றது. இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நாயகியாக சரோஜா தேவி நடித்திருந்தார். சிம்லாவில் ஒரு புல்வெளியில் ஒரு காட்சியில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் தயாராகி கொண்டிருந்தார்கள்.

அப்போது எதையோ பார்த்த எம்.ஜி.ஆர் திடீரென சரோஜாதேவியை வேகமாக வந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் நான்கு அடி தள்ளி கீழே விழுந்தார் சரோஜாதேவி. எல்லாரும் ஏன் எம்.ஜி.ஆர். இப்படி செய்தார் என்று திகைத்து நின்றனர். ஹிமாசல பிரேதேசத்தில் காணப்படும் அரியவகை இரண்டு தலை பாம்பு ஒன்று சரோஜா தேவியின் காலுக்கடியில் படமெடுத்து நின்றதை எம்.ஜி.ஆர் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர். அப்போது கொஞ்சம் கூட பதட்டப்படாமல் யோசித்து சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார் என்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது.

mgr

தன்னை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்த சரோஜாதேவி பதட்டமான சுழ்நிலையில் எப்படி என்னை தள்ளிவிட யோசித்திர்கள்? என்று கேட்டதற்கு எம்.ஜி.ஆர் பதட்டமான சூழ்நிலையிலும் பதட்டமடையாமல் புத்தியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாராம்.

என்றுமே எம்.ஜி.ஆருக்கு ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசுதான்!..

இதையும் படிங்க: ஒரு பூவ வச்சி மறையுற இடமா அது?!.. உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்…

Next Story