Connect with us
mgr

Cinema History

எந்த கெட்ட பழக்கமும் இல்ல!.. பொண்ணுங்களையாவது ரசிப்பீங்களா?!.. எம்.ஜி.ஆரை வம்பிழுத்த இயக்குனர்!..

ஜனரஞ்சக படங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் சரித்திர திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரின் படங்களில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். வாள் மற்றும் கத்தி சண்டைகளில் அதகளம் செய்வார் எம்.ஜி.ஆர். அதற்காகவே ரசிகர் கூட்டம் தியேட்டருக்கு போனது.

ராஜகுமாரி, அரசிளங்குமாரி, நாடோடி மன்னன் என பல படங்களிலும் வாள் சண்டை போட்டு நடித்தார் எம்.ஜி.ஆர். அதன்பின் எம்.ஜி.ஆருக்கு காதல் காட்சிகளில் நடிக்க வராது என பலரும் கிண்டலாக பேசினார்கள். இதைக்கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரியுடன் காதல் காட்சிகள் சிறப்பாக நடித்து அவரை பற்றி பேசியவர்களின் வாயை அடைத்தார்.

mgr

சரித்திர படங்கள் மட்டுமின்றி பல ஜனரஞ்சகமான படங்களை கொடுத்தார் எம்.ஜி.ஆர். பல நடிகைகளுடன் நடித்தாலும் சரோஜாதேவி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் அதிக படங்களில் நடித்தார். ஆனாலும் எந்த நடிகையுடன் அவர் கிசுகிசுவில் சிக்கவில்லை. அதற்கு காரணம் பெண்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும் என்கிற அவரின் எச்சரிக்கை உணர்வுதான்.

அவர் நடிக்கும் படங்களில் பெண்களை விமர்சிப்பது போல வசனம் பேசவே மாட்டார். மாறாக பெண்மையை போற்றும்படி வசனங்களை பேசி நடிப்பார். அதனால்தான் அவரை பெண்களுக்கும் பிடித்துப்போனது. அதேபோல், எம்.ஜி.ஆருக்கு சிகரெட், மது என எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. திரையுலகில் அப்படி ஒரு நடிகர் இருப்பது மிகவும் அபூர்வம்.

mgr

ராஜா வீட்டு பிள்ளை, புதிய பறவை போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தாதா மிராஷி. இவர் எம்.ஜி.ஆரின் நண்பர். எம்.ஜி.ஆரிடம் ஜாலியாக பேசுபவர். ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை பார்க்க வந்த தாதா மிராஷி ‘ராமச்சந்தரன் மனிதன் என்றால் ஜாலியாக இருக்க வேண்டும். உங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. சிகரெட் குடிக்க மாட்டீங்க. என்னை போல சரக்கு அடிக்கும் பழக்கமும் உங்களுக்கு இல்லை. சரி அழகான கலர்களை (பெண்) ரசிப்பீங்களான்னு கூட தெரியல’ என சொன்னாராம்.

அதற்கு புன்முருவலுடன் பதில் சொன்ன எம்.ஜி.ஆர் ‘மிராஷி அழகை ரசிக்கலாம். ஆனால், அதை அடைய வேண்டும் என நினைப்பது தவறு’ என சொன்னார் எம்.ஜி.ஆர். அவரின் பதிலை மிராஷி உட்பட அங்கிருந்த எல்லோரும் ரசித்தார்கள். இந்த தகவலை எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமச்சந்தரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Continue Reading

More in Cinema History

To Top