Connect with us
actor mgr

Cinema History

அந்த ஹீரோவை வச்சி படம் எடுக்க கூடாது!.. தயாரிப்பாளருக்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்…

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் சதி லீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் இரு சகோதரர்கள், மாயா மச்சிந்த்ரா போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆரம்பகாலத்தில் இவரின் திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் என் தங்கை, அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தன.

சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர். அரசியல் மீது கொண்ட பற்றினால் தனி கட்சியையும் ஆரம்பித்தார். என்னதான் அரசியல்வாதியாக இருந்தாலும் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வந்தார். இதனாலேயே இவரை மக்கள் திலகம் என அழைத்தனர்.

இதையும் படிங்க:10 வயதிலேயே சொந்த வசனத்தை பேசிய எம்.ஜி.ஆர்!.. நாடகத்தில் மாஸ் காட்டிய பொன்மன செம்மல்…

இவர் படகோட்டி, வேட்டைகாரன், எங்க வீட்டு பிள்ளை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். எவ்வளவோ வெற்றி படங்களில் நடித்தாலும் இவர் பெரும்பாலும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில்தான் நடித்துள்ளார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த தாய் சொல்லை தட்டாதே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இப்படத்தின் வெற்றிக்குபின் எம்.ஜிஆருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. எங்கு தேவர் சிவாஜியை வைத்து படம் தயாரித்தால் அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து விடுமோ நாம் கீழே இறங்கிவிடுவோமோ எனும் பயத்தில் எம்.ஜிஆர் தேவரிடம் ஒரு நிபந்தனை போட்டுள்ளார்.

இதையும் படிங்க:தொடர்ந்து 100 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகள்!.. தியேட்டரில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்….

அதன்படி இனி தேவர் பிலிம்ஸ் என்றாலே அதில் நான் மட்டுமே கதாநாயகனாக நடிக்க வேண்டும். மற்ற கதாநாயகர்களை கொண்டு படம் தயாரிக்க விரும்பினால் நீங்கள் வேறு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து கொள்ளுங்கள். அப்படியே வேறு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தாலும் அதிலும் நீங்கள் சிவாஜியை வைத்து படம் பண்ண கூடாது என கூறிவிட்டாராம்.

தயாரிப்பாளர் தேவரும் அவரின் நிபந்தனையை  ஏற்றுகொண்டு அதன்பின் தான் எந்த படம் தயாரித்தாலும் அதில் எம்.ஜிஆரை மட்டுமே வைத்து படம் தயாரித்தாராம். இதற்காக எம்.ஜி.ஆரிடம் சத்தியமும் செய்துள்ளார். பின் தண்டாயுதபானி எனும் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரித்தாராம். ஆனால் தான் கொடுத்த வாக்கை மீறாமல் சிவாஜியை இவரின் எந்த படத்திற்கும் பயன்படுத்தவில்லையாம்.

இதையும் படிங்க:அய்யோ முடியலடா சாமி!.. அயலான் ரிசல்ட்.. இப்பவே கண்ணுக்குத் தெரியுதே!.. பொங்கலோ பொங்கல் தான்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top