Connect with us

Cinema History

குண்டடி பட்டபின் கிண்டலடித்த எதிரிகள்!.. பல நாட்கள் பயிற்சி எடுத்து சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..

Actor mgr: சிறு வயது முதலே நம்பிக்கையுடன், வைராக்கியத்துடனும் தனது வாழ்க்கையை துவங்கியவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். கடின உழைப்பை மூலதனமாக வைத்து படிப்படியாக முன்னேறியவர். 30 வருடங்கள் நாடகங்களிலும், 10 வருடங்கள் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

அவர் இடத்தில் யார் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் இருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பார்கள். ஏனெனில், சின்ன சின்ன வேடங்களில் நடித்த 10 வருடங்கள் எம்.ஜி.ஆர் சந்தித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் நடிக்கும் படங்களில் ஹீரோவாக நடித்தவர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் பாடததால் எம்.ஜி.ஆர் வேறு மாதிரி நடித்த பாடல்.. அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!..

படப்பிடிப்பு தளத்தில் கூட எம்.ஜி.ஆருக்கு மரியாதை கிடைக்காது. ஒருமுறை ஒரு நடிகைக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிடைக்க, அவர் மடியில் எம்.ஜி.ஆர் படுத்து வசனம் பேசுவது போல காட்சி. இதைப்பார்த்த அந்த நடிகையின் கணவர் ‘என் மனைவியின் மடியில் ஒரு துணை நடிகர் படுப்பதா?’ என கத்தி கலாட்டா செய்துவிட்டார். எம்.ஜி.ஆர் அவமானத்தால் குறுகிப்போனார்.

ஆனாலும், பொறுமையாக மீனுக்கு காத்திருக்கும் கொக்கு போல காத்திருந்தார் எம்.ஜி.ஆர். ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி, நாடோடி மன்னன் எனும் சூப்பர் ஹிட் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து தனது அஸ்திவாரத்தை பலமாக அமைத்தார். அதன்பின் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்.

இதையும் படிங்க: கோபத்தில் ‘முடியாது’ என மறுத்த வாலி!. சமாதானம் செய்த கலைஞர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன அதே டயலாக்!.

எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை கழுத்தில் சுட்டபின் எம்.ஜி.ஆரால் பேசமுடியவிலை. இனிமேல் சினிமாவில் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார் என பேச துவங்கிவிட்டனர். அவரின் அரசியல் எதிரிகள் அவரை ‘ஊமையன்’ என்றெல்லாம் நக்கலடித்தனர். அது அவரின் காதில் விழுந்ததா தெரியவில்லை. கடல் அலையில் நட்ட நடு ராத்திரியில் இடுப்பளவு தண்ணீரில் நின்று பேச்சு பயிற்சி எடுத்தார். பேசுவதற்காக பல கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதில், வெற்றியும் பெற்று பேச துவங்கி சினிமாவிலும் நடித்து எதிரிகளை வாயடைக்க வைத்தார்.. அந்த வடு அவரின் மனதில் நிரந்தரமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான். தான் இறந்தபின் இராமபுரம் தோட்டத்தில் உள்ள ஆறரை ஏக்கர் நிலத்தை காது கேட்காதவர் மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு எழுதி வைத்தார். இப்போதும் அந்த இடத்தில் அவர்கள் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்களாலதான் படம் ரிலீஸாகவே இல்ல!. வாலியிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top