வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட... பிரபல நடிகரின் சொகுசு கார்!

by சிவா |
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட... பிரபல நடிகரின்  சொகுசு கார்!
X

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பவர் மிர்ச்சி சிவா. சென்னை 28 படத்தில் இவர் நடித்த வேடம் ரசிகர்களை கவர தொடர்ந்து கலகலப்பு, வணக்கம் சென்னை, தமிழ் படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக இவரின் நடிப்பில் சூது கவ்வும் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. தான் நடிக்கும் படங்களின் 2வது பார்ட்டிலும் ஜாலியாக நடிப்பது இவரின் வழக்கம்.

இதனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி அவருக்கு திரையுலகில் நல்லதொரு இடத்தை பெற்றுதந்த சூது கவ்வும் படத்தில் இவர் எப்படி நடித்து இருக்கிறார் என திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Mirchi Shiva

Mirchi Shiva

இந்தநிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை சமீபத்தில் ஜாலியாக மிர்ச்சி சிவா பேசியிருக்கிறார். அதில், 'யுவனின் ஆலோசனைப்படி நான் ஒரு பிஎம்டபிள்யு கார் வாங்கினேன். இதுதான் உங்களுக்கு ஏற்ற கார் என ஷோரூம் ஓனரும் எடுத்து சொல்லி வாங்க வைத்தார்.

ஆனால் சென்னை வெள்ளத்தில் என்னுடைய கார் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இயற்கை கொடுத்ததை அதுவே எடுத்துக்கொண்டது என்று நானும் சமாதானம் அடைந்து விட்டேன்' என்று கேசுவலாக பேசியிருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் எந்த வருத்தமும் இல்லாம எங்க தலைவரு எவ்வளவு பக்குவமா பேசுறாரு பாருங்க என, அவரை பாராட்டி வருகின்றனர். பின்ன அகில உலக சூப்பர் ஸ்டார்னா சும்மாவா பாஸ்!

இதையும் படிங்க: Gossip: விரல் வித்தை நடிகரின் மாஸ் கம்பேக்… நம்பர் நடிகையின் வீழ்ச்சி!… இப்படி ஆகிப்போச்சே!

Next Story