தமிழ் சினிமாவில், எம்ஜிஆருக்கு கிடைத்த அங்கீகாரமும், மரியாதையும் இன்றளவும் வேறு நடிகர்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் எம்ஜிஆர் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் பக்தியும் கொண்ட மக்கள் மிக மிக அதிகம். சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி, எம்ஜிஆருடன் பணிபுரிந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் பட தயாரிப்பாளர்கள் என அனைவருமே எம்ஜிஆர் மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டு இருந்தனர்.
இதில் ஒரு தரப்பு ரசிகர்கள் அன்பின் மிகுதியால் சினிமாவில் நடப்பதை கூட நிஜம் என்று எண்ணும் அளவுக்கு வெகுளியாகவும் இருந்திருக்கின்றனர். அதனால், சினிமாவில் எம்ஜிஆரை எதிர்க்கும் வில்லனாக பல படங்களில் நம்பியார் நடித்திருந்ததால், அவர் மீது தனிப்பட்ட முறையில் ஒரு கோபமே இருந்துள்ளது. எம்ஜிஆர் படம் பார்க்கும் போது வயதான பெண்கள் பலரும், எம்ஜிஆருக்கு கெடுதல் செய்யும் வில்லன் நம்பியாரை, சபிப்பதும் தகாத வார்த்தைகளில் திட்டுவதும் அந்த காலகட்டத்தில் தியேட்டர்களில் பலமுறை நடந்திருக்கிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நம்பியாரே பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நம்பியார் கூறியிருப்பதாவது,நான் ஒருமுறை காரில் சென்றுகொண்டிருந்தேன். என்னுடன் யாரும் இல்லை. அப்போது, நான் காரில் வருவதை அறிந்த நான்கைந்து பேர், என் காரை தடுத்து நிறுத்தி, என்னை சுற்றி வளைத்துக்கொண்டனர்.
என்னப்பா, என்ன விஷயம் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், எப்படி நீ எங்க அண்ணனை அடிக்கலாம் என்று கேட்டனர். நீயே யார் என்று எனக்கு தெரியாத போது உன் அண்ணனை நான் எப்போது அடித்தேன் என்றேன். மக்கள் திலகத்தை எதற்கு அடித்தாய் என்று கேட்டனர். மக்கள் திலகமா, எம்ஜிஆரை சொல்கிறீர்களா, அதற்கு தானே எனக்கு காசு கொடுக்கிறார்கள் என்று அவர்களை சமாளித்தேன். காசு கொடுத்தால், எம்ஜிஆரை எங்கள் தலைவரை நீ அடிப்பியா என்று ஆத்திரப்பட்டனர்.
எத்தனை படங்களில் அவர் என்னை அடிக்கிறார். அதை பற்றி நீங்கள் கேட்கவில்லையே, என்றேன். அவர் உன்னை அடிக்கலாம். நீ எப்படி அடிக்கலாம் என கேள்வி கேட்டு சூழ்ந்துகொண்டனர். அவர்களை சமாளித்து, அங்கிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது என்று நம்பியார் கூறி இருக்கிறார்.சினிமாவில் தான் நம்பியார் வில்லன். உண்மையில், எம்ஜிஆரை போலவே நம்பியாரும் நிஜ வாழ்வில் மிக நல்லவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். சபரிமலை குருசாமி. ஆனால், எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்ததால், பலருக்கும் அவர் கெட்டவராகி விட்டார் என்பதுதான் கொடுமை.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…