More
Categories: Cinema News latest news

ஹரா படத்துக்கு அதை நம்பி போனா ஏமாந்துருவீங்க… புதுசா கொஞ்சம் யோசிங்கப்பா…!

80 காலகட்டங்களில் மைக் மோகனின் படங்கள் என்றாலே அது வெள்ளி விழா தான். அவர் படத்தில் இத்தனைக்கும் ஒரு சண்டைக்காட்சிகள் கூட இருக்காது. ஆனால் திரைக்கதையும், பாடல்களும் ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்து விடும். குறிப்பாகத் தாய்க்குலங்களின் பேராதரவு பெற்ற நடிகர் மோகன்.

கிளிஞ்சல்கள், நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, குங்குமச்சிமிழ், விதி போன்ற மோகனின் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அவர் படத்தில் மைக்கை பிடித்துப் பாட ஆரம்பித்து விட்டால் போதும். பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி விடும். அதனால் தான் மைக் மோகன் என்றே அழைத்தார்கள்.

Advertising
Advertising

அது மட்டுமல்லாமல் பாடல்களுக்கு அவர் உணர்ச்சி பூர்வமாகக் காட்டும் முகபாவங்கள் உண்மையிலேயே அவர் தான் பாடினாரோ என்று எண்ணத் தோன்றும். அந்த வகையில் அவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரா என்ற படம் வெளியாகி உள்ளது. இன்று வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் படத்தைக் காணச் சென்றுள்ளனர்.

Haraa

படத்தில் என்ன தான் கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. வழக்கம் போல மகளைக் கொன்றவர்களை பழிவாங்கும் கதை தான். இதுல எதுவும் புதுசா இல்லை. ஹரா என்ற இந்தப் படத்தில் மோகன் தன் வயதுக்கேற்ற ரோலில் தான் நடித்துள்ளார். அந்த வகையில் அவரைப் பாராட்டலாம்.

ஆக்ஷன் படமே நடிக்காத ஒருவருக்கு ஆக்ஷன் பண்ற ரோலைக் கொடுத்ததற்காகவே டைரக்டரைப் பாராட்டலாம். பின்னணி இசை கூட பரவாயில்லை. ஒளிப்பதிவும் நல்லாருக்கு. ஆனால் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் படம் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும்.

இதையும் படிங்க… ரஜினியோட அந்தப் படம் 3 படையப்பாவுக்குச் சமமா..? அப்புறம் ஏன் மிஸ் ஆச்சு?

படத்தில் மெடிக்கல் மாபியா கேங்… சம்பந்தமே இல்லாம போலீஸ்காரரின் பிளாஷ்பேக் வருது. இது எல்லாம் பார்க்க காமெடியாகத் தான் இருக்கு. ஹைலைட்டாக படத்தில் சொல்ல வேண்டிய அளவு எதுவுமில்லை. அப்பா மகள் சென்டிமென்ட் படத்தில் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்குது. அடுத்த ரவுண்டு வேணா மோகன் போகலாம். ஏன்னா அவரோட ரோலைக் கச்சிதமா செய்திருக்கிறார்.

விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். கோவை எஸ்.பி.மோகன்ராஜ் தயாரித்துள்ளார். படத்தில் மோகனுடன் அனுமோல், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, சிங்கம்புலி, சாருஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார்.

Published by
ராம் சுதன்

Recent Posts