இயக்குனர்களை இப்படி தேர்ந்தெடுத்தே ஹிட் படங்களை கொடுத்தேன்!.. சீக்ரெட் ஆப் சக்சஸ் சொல்லும் மோகன்!...

பெங்களூரை சேர்ந்த மோகனுக்கு நடிகராக வேண்டும் என்பது ஆசை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை நண்பர்களுடன் இணைந்து விரும்பி பார்ப்பார். முதல் படமே கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் கோகிலா. கன்னட மொழியில் உருவான இந்த படத்தை இயக்கியது ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா.

அதன்பின் அவரின் இயக்கத்தில் மூடுபனி படத்தில் நடித்தார் மோகன். அப்படியே சில தெலுங்கு படங்களிலும் மோகன் நடித்தார். கிழக்கே போகும் ரயில் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் இவர்தான். ஆர்.சுந்தர்ராஜான் இயக்கத்தில் வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஒரே ஒரு லெட்டர்தான் போட்டேன்!.. பணத்தை அனுப்பிட்டார்!.. விஜய் சேதுபதியை புகழும் பிரபலம்!..

அதன்பின் 10 வருடங்கள் மோகனின் வண்டி நிற்கவே இல்லை. கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்தார் மோகன், நிறைய புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் மோகன். ஒரு இயக்குனரின் படத்தில் மோகன் நடித்துவிட்டால் கண்டிப்பாக அந்த படத்தில் வேலை செய்த ஒரு உதவி இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் நடிப்பார் மோகன். இதுதான் அவரின் வளர்ச்சி.

அதேபோல், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லன், நெகட்டிவ் ரோல் என பல கதாபாத்திரங்களிலும் மோகன் நடித்தார். அதனால்தான் பல இயக்குனர்களும் மோகனை தேடி வந்தனர். 90களுக்கு பின் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் மோகன் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

mohan

இப்போது ஹரா மற்றும் கோட் ஆகிய படங்கள் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருப்பதால் பல ஊடகங்களுக்கும் அவர் பேட்டி கொடுத்து வருகிறார். அதில், பல விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் மோகன் பேட்டி கொடுத்தார்.

அதில் ‘நான் பீக்கில் இருந்தபோது பல புது இயக்குனர்கள் என்னை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக சொல்லி என்னை அணுகுவார்கள். 10 பேர் வந்தால் அதில் 2 பேர் மீது நம்பிக்கை வரும். அவர்கள் சினிமா மீது ஒரு பசியுடன் இருப்பார்கள். எனவே, வெற்றி கொடுக்க உழைப்பார்கள். அதனால்தான் அவர்களின் இயக்கங்களில் நடித்தேன். அது மக்களுக்கும் பிடித்திருந்தது. இதுதான் என் வெற்றியின் ரகசியம்’ என மோகன் சொன்னார்.

 

Related Articles

Next Story