Cinema News
என்ன மனுஷன்யா? விஜய்கிட்ட இருந்து கண்டிப்பா இத கத்துக்கனும்.. மைக் மோகனா சொன்னது?
Actor Mohan: 80களில் தனது அழகான முகத்துடனும் இளம்பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரை மைக் மோகன் என்றும் அழைப்பது வழக்கம். ரஜினி கமல் இவர்கள் உச்சத்தில் இருக்கும்போதே அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மோகனின் படங்கள் 100 நாள்களை தாண்டியும் திரையரங்குகளில் ஓடிய காலம் உண்டு.
வெள்ளி விழா நாயகன் என்ற பட்டத்திற்கும் சொந்தக்காரர் மோகன். முதலில் மோகன் நாடக நடிகராக தான் அறிமுகமானார். கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மோகன் முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்ததால் அதிலிருந்து கோகிலா மோகன் என்றும் அழைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் நடித்த ஒரு சில படங்களில் மைக்கை பிடித்து பாட்டு பாடி நடித்ததால் அதுவும் அந்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனதால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்? இளையராஜாவை சீண்டிய பாக்கியராஜ்
இவருக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது படங்களில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்த அந்த குரல்தான். அந்த குரலுக்கு சொந்தக்காரர் விஜயின் தாய்மாமாவும் பாடகருமான எஸ் என் சுரேந்தர். மோகன் நடித்த எல்லா படங்களுக்கும் அவர்தான் டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பார் .ஹீரோவாக அறிமுகமாகி நடிக்க தொடங்கிய மூன்று வருடங்களில் தொடர்ந்து 300 நாட்கள் ஓடிய மூன்று வெற்றி படங்களை கொடுத்த ஒரே ஹீரோ மோகன் என்ற பெருமையையும் பெற்றவர்.
இப்படி பல புகழ்களுக்கு சொந்தக்காரரான மோகன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹரா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இப்பொழுது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜயின் கோட் திரைப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்ற ஒரு செய்தியும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
இதையும் படிங்க: இந்த படம் குப்பை.. பைசா கூட தேறாது!.. சத்யராஜின் முகத்துக்கு நேராக சொன்ன தயாரிப்பாளர்…
ஆனால் அதைப்பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அது குறித்த எந்த ஒரு போஸ்டரும் இதுவரை வெளியாகவில்லை. இதைப் பற்றி மோகனிடமே கேட்டதற்கு கோட் படத்தை பற்றி இப்பொழுது நான் எதுவும் சொல்ல முடியாது. கூடிய சீக்கிரம் அந்த படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அந்த படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவுடன் இணைந்தே நான் உங்களை சந்திக்கிறேன்.
அதுவரை என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று பதில் அளித்திருக்கிறார். இப்படி அவர் கூறினாலும் அடுத்து அவர் சொன்ன விஷயத்தை வைத்து பார்க்கும் பொழுது கோட் படத்தில் அவர் கண்டிப்பாக இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. விஜயைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த மோகன் விஜய்யிடம் பழகிய பிறகு அவரிடம் இருந்து ஒரு சில விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன்.
இதையும் படிங்க: தளதளன்னு வளர்ந்து நிக்குது அழகு!.. தாரளமா காட்டி தவிக்கவிடும் மாளவிகா மோகனன்…
படப்பிடிப்பில் இருக்கும் போது விஜய் எப்போதுமே மிகவும் அமைதியாகவே இருப்பார் .ஆனால் அந்த அமைதிக்கு பின்னாடி எல்லாவற்றையும் அவர் கூர்ந்து கவனிப்பார். அந்த ஒரு குணம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த ஒரு விஷயத்தை நான் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என மோகன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.