Cinema News
தியேட்டருக்கு போய் இந்த 3 படங்களையும் பாக்கணும்னு ஆசை!.. மைக் மோகன் போடும் லிஸ்ட்..
சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சில்வர் ஜூப்ளி நாயகன் என அழைக்கப்பட்டவர்தான் மைக் மோகன். இவர் நடித்த முதல் படமான மூடுபனி அதிக நாட்கள் ஓடியது. அதன்பின் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
பந்தா இல்லாத, எளிமையான, அதிக சம்பளம் கேட்காத, தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்தார். அதனால்தான் தொடர்ந்து அவரால் நடிக்க முடிந்தது. ஒரு வருடத்திற்கு 20 படமெல்லாம் நடித்தார். வருடத்திற்கு மோகனின் நடிப்பில் 15 படங்கள் வெளியாகும். அவரின் படங்களுக்கு அவரின் படங்களே போட்டியாக வந்தது.
இதையும் படிங்க: மோகன் நடிக்க வரலேன்னா என்ன வேலை பார்த்திருப்பார் தெரியுமா? கமல் படம் இவரால் தடையா?
இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழா ஓடியது. ரஜினி, கமல் படங்களுக்கு போட்டியாக மோகனின் படங்கள் நல்ல வசூலை பெற்றது. ஆனால், ஒருகட்டத்தில் சில காரணங்களால் மார்க்கெட்டை இழந்த மோகன் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடிக்கவில்லை.
இப்போது ஹரா என்கிற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் ,விஜய் நடித்துள்ள கோட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மோகனின் நடிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ராமராஜனின் ரீ எண்ட்ரி வெற்றி பெறாத நிலையில் மோகன் வெற்றி பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது.
இதையும் படிங்க: திடீரென ஓடிவந்த மனோபாலா!.. கடுப்பாகி திட்டிய இளையராஜா!.. மோகன்தான் காரணமாம்!…
ஹரா படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் மோகன். அப்போது ‘தியேட்டருக்கு போய் நீங்கள் பார்க்க ஆசைப்படும் 3 படங்கள் எது?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன மோகன் ’எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன், ரஜினி நடித்த பாட்ஷா, கமல் நடித்த நாயகன்’ என பதில் சொன்னார்.
அதன்பின் ‘2 படங்கள் ஓடிவிட்டாலே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் காலம் இது. ஆனால், பல சில்வர் ஜூப்ளி கொடுத்த மோகன் ஏன் அமைதியாக இருக்கிறார்?’ என கேட்டதற்கு ‘நீங்கள் தப்பான நபரிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்’ என பதில் சொன்னார். மேலும், ‘நடிகனாக நீங்கள் கற்றது மற்றும் பெற்றது எது?’ என்ற கேள்விக்கு ‘எப்போதும் மனிதனாக இருந்தால் மட்டுமே எல்லாமே நிரந்தம் என்பதை கற்றுக்கொண்டேன். பெற்றது மக்களின் ஆதரவுதான். அதுதான் எனக்கு ஆசிர்வாதம்’ என பதில் சொன்னார் மைக் மோகன்.