Connect with us

Cinema News

விஜய்க்கு போட்டியா வெயிட்டா டீசரையே இறக்கிய மைக் மோகன்!.. அடடா.. ஹரா படத்துல கை விளையாடுது கன்ல!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் மெயின் வில்லனாக மைக் மோகன் தான் நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளார். அதற்கு போட்டியாக தற்போது நடிகர் மோகன் ஹீரோவாக நடித்துள்ள ஹரா படத்தின் அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்து வரும் ஹரா படத்தில் அவருடன் இணைந்து குஷ்பூ நடித்துள்ளார். யோகி பாபு காமெடியனாக மோகனுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க: கோட் படம் வெங்கட் பிரபு யூனிவர்ஸா!.. அதுக்குத்தான் அஜித், சூர்யா, சிம்பு பட ரெஃபரன்ஸ் இருக்கா?..

ஹரா படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டீசர் தற்போது புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் அந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு முன்னதாக வெளியாகுமா? அல்லது அந்த படத்தில் மோகனுக்கு கிடைக்கும் பப்ளிசிட்டிக்கு பிறகு ஹரா படம் வெளியாகுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: கமலுக்கு கதையே பிடிக்கல! ஆனாலும் நடிச்சி ஹிட் கொடுத்தார்!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே இயக்குனர்!

ஆக்ஷனில் பட்டயை கிளப்பும் காட்சிகளில் மோகன் நடித்துள்ளார். மேலும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர் விளையாடும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. ஆக்சன் நடிகர்களுக்கு தான் தற்போது மார்க்கெட் அதிகம் இருப்பதை பொறுத்துக் கொண்ட மோகன் ஹரா படத்தில் ஆக்ஷனை கையில் இருந்திருப்பது பக்காவான விஷயம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கோட் படத்தில் மோகன் எப்படி நடித்திருக்கப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ராமராஜன், மோகன் என சினிமாவில் பல ஆண்டுகளாக காணாமல் போன மக்களின் ஃபேவரைட் நடிகர்கள் எல்லாம் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top