சோடா கேட்ட நடிகவேள் வாரிசு!.. கிடைக்காத ஆத்திரத்தில் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திய நஷ்டம்..
தமிழ் சினிமாவில் தன் கம்பீர குரலால் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. பார்ப்பதற்கே பயம் கலந்த மரியாதைதான் வரும். சினிமாவில் அவருக்கு என்று ஒரு தனி மரியாதையே இருக்கின்றது இன்றளவும். அவரின் வாரிசாக வந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு. இவரும் பார்க்க ராதாவை போன்றே இருப்பார்.
நடிப்பிலும் அப்பாவிற்கு மிஞ்சியவர் தான். தோற்றத்தில் இருந்து குரல் நடிப்பு என அனைத்திலும் அப்பாவை போலவே இருப்பார் வாசு. இவரும் ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்த நிலையில் வாசு எப்போதுமே மதுப்பழக்கத்திற்கு ஆளானவராம்.
ஒரு சமயம் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை தயாரித்த ஒரு படத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா முக்கிய ரோல்களில் நடிக்க வாசுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தாராம். மதுப்பழக்கத்திற்கு ஆளான வாசு அந்த படப்பிடிப்பு சமயத்தில் விஸ்கியுடன் சோடாவை சேர்த்து சாப்பிட ஒரு சிறுவனை அழைத்து சோடா வாங்கி வரச்சொல்லியிருக்கிறார்.
சிறுவன் போய் வெகு நேரமாகியும் வராததால் இன்னொரு சிறுவனை அனுப்பியிருக்கிறார். சோடா வந்தபாடில்லை. அதனால் இன்னொரு சிறுவனை அனுப்ப அந்த சிறுவனோ நேராக படத்தின் தயாரிப்பாளரான சின்ன அண்ணாமலையிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ அப்படியா? சரி வாங்கி கொடுக்காதே என்று சொல்லுவதை இங்க இருந்து வாசு பார்த்து விட்டார்.
இதையும் படிங்க : மாஸ் ஹிட் அடித்த பேய் படத்தின் நான்காம் பாகத்தில் களமிறங்கும் விஜய் சேதுபதி… அப்போ ஆர்யாவோட நிலைமை??
அப்போது ஒன்றும் சொல்லாமல் சூட்டிங் நடக்கிற இடத்துக்க வர ஷார்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கேமிரா அந்த காலத்தில் போய்க் கொண்டே இருக்கும். அவரவர் வசனத்தை வரிசையாக பேசிக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் சிவாஜி பேச அப்புறம் விஜயா பேச கடைசியாக வாசு தவறுதலாக வேண்டுமென்றே உளறியிருக்கிறார்.
இப்படி ஒரு முறை இருமுறை இல்லை எட்டு முறை டேக் வாங்கிக் கொண்டே இருக்க சிவாஜி வந்து வாசுவை என்ன குடிச்சுட்டு உளறுகிறாயா? என்றூ சத்தம் போட சரி அண்ணே என்றூ சொல்லி ஒன்பதாம் முறை சரியாக பேசிமுடித்திருக்கிறார். அந்த சமயத்தில் பிலிம் ரோல் என்பதால் இவர் எடுத்த டேக்குகளுக்கு கிட்டத்தட்ட 10000 ரூபாய் சின்ன அண்ணாமலைக்கு நட்டம் ஆகியிருக்கிறது.
ஷார்ட்டை முடித்துவிட்டு சின்ன அண்ணாமலையிடம் வாசு ஒரு சோடாவிற்காக 10000 ரூபாய் நட்டமாகிவிட்டதே? நான் கேட்டத அப்பவே கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று கூறினாராம். இதை கேட்டதும் சின்ன அண்ணாமலைக்கு பகீர் என்று ஆகிவிட்டதாம் . வாசு செய்ததில் தவறு இருந்தாலும் நடிகர்களிடம் எப்படி பக்குவமாக அணுக வேண்டும் என்பதை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.