MS Bhaskar: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக இருப்பவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரைக்கும் ஒரு சில நடிகர்களுக்கு எமோஷனல் காட்சிகளில் மட்டும்தான் நடிக்க வரும். ஒரு சில நடிகர்கள் காமெடி காட்சிகளில் மட்டும்தான் நடிப்பார்கள். ஒரு சில பேர் வில்லன் ரோல்களில் நடிப்பார்கள்.
ஆனால் எம் எஸ் பாஸ்கரை பொருத்தவரைக்கும் எல்லாவிதமான ரோலுக்கும் மிகத் தகுதியானவர். எல்லா ரோல்களிலும் தன்னை ஒரு திறமையான நடிகர் என ஒவ்வொரு படத்திலும் காட்டி வருகிறார் எம் எஸ் பாஸ்கர். இவரின் நடிப்பில் கடைசியாக அனைவரும் ரசித்த படம் என்றால் அது பார்க்கிங் திரைப்படம். ஹரிஷ் கல்யாண் உடன் இவர் சேர்ந்து நடித்த காட்சிகள் அனைத்துமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ‘தெகிடி’ பட நடிகர்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்
அதிலும் ஒரு ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரமாக இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஹரிஷ் கல்யானை விட எம் எஸ் பாஸ்கரை தான் இந்தப் படத்தில் அனைவரும் பாராட்டினர். பல நாடகங்களில் நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பையும் தாண்டி பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு ,ஆங்கில படங்களுக்கும் இவர் தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்.
முதன் முதலில் 1987 ஆம் ஆண்டு திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எம் எஸ் பாஸ்கர். அதன் பிறகு எங்கள் அண்ணா திரைப்படம் தான் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. மொழி திரைப்படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் விருதையும் எட்டு தோட்டாக்கள் படத்திற்காக சிறந்த துணை நடிகர்களுக்கான விருதையும் பெற்றவர் எம் எஸ் பாஸ்கர்.
இதையும் படிங்க: 1000 படங்கள்! 50 வருட ரகசியம்.. குமரிமுத்துவின் டைரியை பார்த்து ஷாக் ஆன ஒட்டுமொத்த குடும்பம்
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த லாந்தர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது சில தகவல்களை பகிர்ந்தார் எம் எஸ் பாஸ்கர். சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறீர்களே ?பெரிய ஹீரோக்களுடன் நடிக்க மாட்டீர்களா என்ற கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது .அதற்கு பதில் அளித்த எம் எஸ் பாஸ்கர் பெரிய ஹீரோக்களின் படங்களா? அந்த மாதிரி வாய்ப்புகள் என்னை தேடி வருவதே இல்லை.
என்னை பொறுத்த வரைக்கும் சிங்கத்துக்கு வாலா இருக்கிறதை விட ஈக்கு தலையாக இருப்பேன் என கூறியிருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். அதாவது எட்டு தோட்டாக்கள் படத்தை பொருத்தவரைக்கும் அவரிடம் கதை சொல்லும் போது அந்தப் படத்தில் அவருடைய கேரக்டரின் முக்கியத்துவம் வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. அந்த மாதிரி சின்ன ஹீரோக்கள் நடிக்கிற படம் சின்ன பட்ஜெட் படங்கள் இதில் அவருடைய கதாபாத்திரத்திற்கு என ஒரு வெயிட் எப்பொழுதுமே இருக்கும்.
இதையும் படிங்க: பல கோடி மதிப்புள்ள லம்போகினி காரை வைத்திருக்கும் திரைப்பிரபலங்கள்!.. அஜித்தான் டாப்பு!..
இதை அவர் மனதில் வைத்துக்கொண்டு தான் இந்த மாதிரி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். பெரிய ஹீரோக்கள் படம் என்றால் ஒரு சைடு ஆர்டிஸ்ட் மாதிரிதான் இவருடைய கேரக்டர் இருக்கும். அதனால்தான் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் இவரை தேடி வருகின்றன.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…