தமிழ்சினிமாவின் கருப்பு நடிகர்கள் அனைவருமே திறமைசாலிகள் தான். அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் மென்மையான ஹீரோவாக இருந்து ஆக்ஷனும் எனக்கு வரும் என்று நிரூபித்துக் காட்டி தாய்க்குலங்களின் மத்தியிலும் பேராதரவு பெற்றவர் இதயம் கவர்ந்த நாயகன் முரளி.
”நான் நடிக்கும் போது கருப்பு நிற ஹீரோவ யாருமே ஏத்துக்கல….காதல் தான் நாகரீகத்தையே உருவாக்குகிறது…” சொல்கிறார் நடிகர் முரளி. தொடர்ந்து அவரது நினைவலைகளைப் படியுங்கள்.
சினிமா உலகத்திற்கு நுழைய பிள்ளையார் சுழி போட்டது எங்க அப்பா தான். நான் முதலில் அசிஸ்டண்ட் டைரக்டராத் தான் வேலை செய்தேன். சின்ன சின்ன கேரக்டர்களுக்கு எல்லாம் டயலாக் சொல்லித் தருவது தான் என் வேலை. அப்போ எங்க அப்பா நீ நல்லா டயலாக் சொல்லித் தரீய ஏன் நடிக்கக் கூடாது என கேட்டார். அப்போ நான் டைரக்டரா ஆகறதுன்னு தான் ஆசைப்படறேன்.
நான் பண்ண முதல் படம் பூவிலங்கு. அப்போ களத்தில யாரும் கருப்பு நிறத்தில் ஹீரோவாக இல்லை. யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களப் பொறுத்த வரை இவங்க தான் நமக்கு பிடிக்கும் என்று குறிப்பிட்டு சொல்வது இல்லை. காதல் என்பது தான் உலகம். இந்தக் காதலால் தான் உறவுகளே நியமிக்கப்படுகிறது.
இது மனைவி…இது தாய் என்று பிரிக்கிறது. காதல் தான் நாகரீகத்தையே உருவாக்குகிறது. ஒரு மனிதன் பிறந்த நாள் முதல் அவனுக்கு எதிர்பாலினமாய் உள்ள பெண் மீது எப்போது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறதோ அன்று முதல் அவன் காதல்வயப்பட்டவனாகிறான். அதில் வந்து ஒவ்வொரு மனிதனோட பாதிப்பு இருக்கு.
நான் ஒரு படம் பண்ணினால் எனக்கு மேல ஒரு முதலாளி இருக்காங்க. தயாரிப்பாளர், டைரக்டர் இருக்காங்க. பொதுவா எல்லாருமே பேசும்போது ஹீரோ தான் எல்லா முடிவையும் எடுப்பாருன்னு சொல்வாங்க. ஆனா அது இல்ல. அதுக்கு மேல இருக்காங்க. அவங்க வந்து இன்னைக்கு ட்ரெண்ட் லவ் ஸ்டோரி.
காதல் கோட்டைல ஆரம்பிச்சி காலமெல்லாம் காதல் வாழ்கன்னு தொடர்ந்து லவ் சப்ஜெக்ட் படங்களா பண்றது…ஏன்னா இன்னைக்கு உள்ள ட்ரெண்ட்டுக்கு காதல் படங்கள் பண்ணும் போது ஹிட் ஆகுது. அடுத்த வருடம் பார்த்தீங்கன்னா எல்லாம் ஆக்ஷன் படங்கள் தான். லவ்வுங்கறது மினிமம் கேரண்டி.
ஏன்னா ஒவ்வொரு மனிதனோட உணர்வு அது. அதில நிச்சயமா ஜெயிக்க முடியும். என்னைப் பெற்றது ஒரு தாய். என்னைப் பாதுகாத்ததும் ஒரு தாய். என்னை இந்த அளவுக்கு வளர்த்ததும், என் ரசிகரும் ஒரு பெண்மணி தான்.
நான் வில்லேஜ்ல எல்லாம் ஷ_ட்டிங் போனா…தம்பி…உன்னை மாதிரியே என் பையன் இருக்காம்பா…உன்னை மாதிரியே கலர்ல இருக்கான்…அவன் இப்ப தான் வயலுக்குப் போயிருக்கான்…உன்னை மாதிரியே நல்லா பேசுவான்னு அங்க இருக்கற பெண்கள் சொல்வாங்க.
அவங்க கொடுக்கற பத்து ரூபா டிக்கட் காசு தான் எனக்கு அன்பு. என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு நடிகனுக்கு சம்பளம் யார் என்றால் அவன் படம் பார்க்க வாங்கும் டிக்கட் காசு 10 ருபாய். அவன் டிக்கட் வாங்கிப் படம் பார்த்து அது சக்சஸ் ஆனதால் தான் இன்னைக்கு நான் கார், பங்களாவோட வசதியா இருக்கேன்.
இதுல லேடீஸ்ஸோட ஆதரவுங்கறது மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்னைக்கும் எங்களோட அதிகமா சம உரிமை அதிகம் இருப்பது பெண்களுக்குத் தான். அவங்க எடுக்கறது தான் முடிவு.
மண்ணுக்குள் வைரம், குடும்பம் ஒரு கோவில், என் ஆச ராசாவே படங்கள்ல நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நடிச்சிருக்கேன். பேசிக்கா அவருக்கிட்ட கத்துக்கவேண்டிய விஷயம் நிறைய இருக்கு. எந்த ஒரு நடிகனும் அவரோட பாதிப்பு இல்லாம நடிக்க முடியாது. எந்த ஒரு கேரக்டர எடுத்து நான் பண்ணினாலும் ஏற்கனவே அவரு அதைப் பண்ணிருப்பாரு.
சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு பொதுவா அவருக்கூட நடிக்கும் போது ஒரு நர்வஸ் இருக்கும். ஆனா நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்து வந்ததால எனக்கு ஒரு மரியாதை கலந்த அன்பு தான் இருந்தது.
பொதுவா தமிழகத்துல கிராமங்கள் தான் அதிகம். அவங்களுக்கு பொழுதுபோக்கு சினிமா தான். அதனால அவங்கள திருப்திபடுத்துற மாதிரி நடிச்சாத் தான் சக்சஸ் ஆகும். ஒரே படத்தை 5……6 தடவை பார்ப்பாங்க. பேசிக்கா என்னைப் பொறுத்த வரை மிடில் கிளாஸ் சப்ஜெக்ட் படங்கள் தான் எனக்கு சக்சஸா இருந்தது.
இப்போ நான் மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில நடிச்சா எனக்கு மாணிக்கமாகவே இருக்கணும். என்னை யாரும் முரளின்னு கூப்பிடக்கூடாது. சேரன் என் கேரக்டருக்காக என்னோட ட்ரெஸ் எல்லாத்தையும் டீ டிக்காஷன்ல போட்டு பிழிஞ்சி எடுத்து கலர மாத்தினாரு. பைட் சீன்ல நடிக்கும்போது பிரசண்ட்ஸ் ஆப் மைன்ட் ரொம்ப முக்கியம். ஒரு செகண்ட் கவனம் மாறுனா கூட நமக்கு அடி பட்டுரும்.
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…